நயன்தாராவை தொடர்ந்து அந்த பிசினஸில் இறங்கிய சமந்தா!.. தலையில துண்டு போடாமல் இருந்தால் சரி!..

Published on: December 10, 2023
---Advertisement---

சினிமா நடிகைகள் பெரும்பாலும் தயாரிப்பாளரையோ, நடிகரையோ அல்லது தொழில் அதிபரையோ திருமணம் செய்து கொண்டு ஒரு கட்டத்தில் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், சில நடிகைகள் மட்டுமே தன்னை வளர்த்து ஆளாக்கிய சினிமாத்துறைக்கு ஏதாவது திரும்ப செய்ய என நினைத்து தான் சேர்த்து வைத்த சொத்தில் இருந்து பணத்தை எடுத்து செலவிடுவார்கள்.

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவும் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன் அறிவிப்பை புதிதாக ஒரு பங்கேற்றுள்ள எம்டிவி ஹஸ்டில் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யாரு டைட்டில் வின்னருன்னு ஆரி அர்ஜுனன்னுக்கும் தெரிஞ்சிடுச்சோ!.. அந்த ட்வீட்டை டெலிட் பண்ணிருக்காரே?..

Tralala Moving Pictures எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதில், புதிய இயக்குநர்களையும் புதிய கதைகளையும் அறிமுகம் செய்ய விருப்பப்படுவதாகவும் சமந்தா அந்த நிகழ்ச்சியில் அறிவித்த வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா திடீரென தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளாரே என்கிற கேள்வி தான் சினிமா உலகிலேயே பலருக்கும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: எஸ்கேவுக்கு செம டஃப் கொடுப்பார் போல தெரியுதே!.. செல்லம்மாவுடன் சுத்துனதே ஹீரோயினாக்கத்தானா கவின்?

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல பட வாய்ப்புகள் சமந்தாவை தேடி வரும் நிலையில், அதிகமாக சம்பாதித்து வரும் சமந்தா சினிமாவுக்கு அதில் கொஞ்சம் செலவு செய்யலாமே என நினைத்து இப்படியொரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தயாரிப்பு நிறுவ்னங்களை ஆரம்பித்து மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு, பின்னர் தங்கள் தயாரிப்பில் தாங்களே நடிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், சமந்தா தயாரிப்பாளராக மாறிய நிலையில், தலையில் துண்டு போடாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.