என்னிடம் கேட்ட மோசமான கேள்வி! 25 வருட கெரியரில் முதன் முறையாக அந்த அனுபவத்தை கூறிய ஜோதிகா

Published on: December 11, 2023
jyothika
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் 2000களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என கோலிவுட்டில் இருக்கும் அனைத்து முக்கியமான நடிகர்களுடனுன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகைதா ஜோதிகா.

தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா மக்களின்  குறிப்பாக பெண் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர். திருமணத்திற்கு பிறகு சிறிது நாள்கள் சினிமாவில் தலைகாட்டாத ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…

அதை தொடர்ந்து காற்றின் மொழி, ராட்சசி, மகளிர் மட்டும் போன்ற சவாலான கதாபாத்திரங்கள் உடைய கதைகளை ஏற்று நடித்து இன்று ஒரு மதிப்புமிக்க நடிகையாகவும் திகழ்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த காதல் தி கோர் திரைப்படம்.

இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு மம்மூட்டிக்கு இணையான சமமான ரோல் என்று ஜோதிகா கூறினார். மேலும் இதை பற்றி கூறிய ஜோதிகா மலையாளத்தில் இது தான் முதல் படமாம்.

இதையும் படிங்க: குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!.. மறைக்காம காட்டி வயசு பசங்களை வளைக்கும் அதுல்யா..

தமிழிலும் ஏகப்பட்ட படங்கள் வருகிறதாம் .ஆனால் அதெல்லாம் இரண்டு சீன்களில் நடிக்கும் படியான கதாபாத்திரம் மற்றும் சிறிய ரோல்களாம். பல இயக்குனர்கள் தன்னிடம் வந்து கேட்கும் மோசமான கேள்வி  ‘இரண்டு சீன் மேம். எப்படியாவது நடித்து கொடுங்கள் மேம் என்றுதான்’ என கூறினார்.

இதை நான் மரியாதை குறைவாகத்தான் நினைக்கிறேன் என்றும் அதை எப்படி என்னிடம் வந்து கேட்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என்றும் சின்ன ரோலாக இருந்தாலும் அந்த ரோலுக்கு என்று ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என ஜோதிகா கூறினார்.

இதையும் படிங்க: இனிமேதான் எங்க ஆட்டத்த பாக்கப் போறீங்க! அர்ச்சனா எடுத்த முடிவு – தோள்கொடுக்கும் விசித்ரா

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.