வெறும் காமெடி நடிகர் இல்ல!.. ரெடின் கிங்ஸ்லி எவ்ளோ பெரிய தொழிலதிபர்னு தெரியுமா?..

Published on: December 11, 2023
Redin Kingsley
---Advertisement---

ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் யாரைக் கல்யாணம் பண்ணினார் தெரியுமா? மாஸ்டர் படத்தில் பல் மருத்துவராக வரும் சங்கீதாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

அதெப்படி இவருக்கு இந்தப் பொண்ணு செட்டானதுன்னு சிலர் காமெடியாகப் பேசுகிறார்களாம். ஆனால் உண்மையில் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல ரெடின் கிங்ஸ்லி. அவருக்குப் பின்னால இன்னொரு முகமும் இருக்கு. என்னன்னு பார்க்கலாமா…

ஆனால் இவர் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே பிசினஸ்ல இருந்தவர் தான் இவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.

ரெடின் கிங்ஸ்லி படங்களில் வரும் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல. பிசினஸ் மேன். ஸ்பெல்போன் என்ற மிகப்பெரிய ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்துள்ளாராம். பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயண்ட் வீல்ஸ், கிட்ஸ் விளையாடும் செட் அப்புகள் என எல்லாமே பண்றது கிங்ஸ்சோட கம்பெனி தானாம்.

RK Marriage
RK Marriage

இதுமட்டுமல்லாமல் அரசு நடத்தும் அனைத்துப் பொருட்காட்சிகளையும் கிங்ஸ்லியோட  கம்பெனி தான் நடத்திக் கொடுக்குமாம். பெசன்ட் நகர் பீச்சில் நடக்கும் கண்காட்சி, பொருட்காட்சியை நடத்துவதும் இவரது கம்பெனி தானாம்.

பிசினஸ் வட்டத்துக்குள் இவரோட பேரு ரெடின் தானாம். அங்கு ரொம்பவே பர்பெக்டா நடந்து கொள்வாராம். ரெடின் கிங்ஸ்லி ஒரு டான்சராகத் தான் சினிமாவுக்குள் நுழைந்தார். அவள் வருவாளா படத்தில் இடம்பெறும் ருக்கு ருக்கு ருக்குமணி என்ற பாடலில் இவர் குரூப் டான்சர்களில் ஒருவராக வருவார். அப்போ ரொம்ப சின்னப் பையனாகத் தெரிவார்.

ஸ்பெல் போன் டான்ஸ் கம்பெனி, ஸ்கூல் என ஆரம்பித்து தன் வட்டத்தை விரிவாக்கியுள்ளாராம். பல வருடங்களாக இந்த பிசினஸ்சில் இருக்கிறாராம். எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பண்டிகைக்காலங்களில் இவர் தான் பிரம்மாண்டமான செட் எல்லாம் போடுவாராம்.

திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்ததால் 46வது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாராம். நண்பர்கள் எல்லாம் டைரக்ட்டா 60ம் கல்யாணம் தானா என்றெல்லாம் கலாய்த்துள்ளனர். அதன்பிறகு திடீர் என காதல் வந்ததால் தான் திருமணம் செய்து கொண்டாராம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.