ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

Published on: December 12, 2023
rajini
---Advertisement---

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவாஜி ராவ் பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தவர். நண்பர்களுடன் நாடகங்களை பார்க்கப்போன அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தது. துரியோதனன் வேடத்தில் அவர் காட்டிய உடல்மொழிக்கு ரசிகர்களிடம் கைதட்டல் கிடைத்தது.

ரஜினியிடம் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்த அவரின் நண்பர் பகதூர் என்பவர் ‘நீ சென்னை போய் நடிப்பு கல்லூரியில் படித்துவிட்டு, சினிமாவில் நடிக்க முயற்சி செய்’ என சொல்லி, செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்படித்தான் சென்னை வந்தார் ரஜினி.

rajini

நடிப்புக் கல்லூரிக்கு ஒருமுறை பாலச்சந்தர் வர, ரஜினியுடன் சில நிமிடங்கள் செலவழித்த அவருக்கு ரஜினியிடம் ஏதோ இருப்பது தெரிந்தது. அப்போது அவர் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க வைத்தார். அதன்பின் இயக்கிய 3 படங்களில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இதையும் படிங்க: ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..

கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகிய ரஜினி பைரவி படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு பிஸியான நடிகராகவும் மாறினார். அவரின் படங்கள் நல்ல வசூலை பெறவே சூப்பர்ஸ்டார் பட்டமும் அவரை தேடிவந்தது.

ரஜினி ஒன்றும் துவக்கம் முதலே லட்சங்களில் சம்பளம் வாங்கவில்லை. பதினாறு வயதினிலே படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 3 ஆயிரம் மட்டுமே. அதன்பின் பல படங்களுக்கும் சில ஆயிரங்கள் மட்டுமே வாங்கினார். பிரியா படத்தில் நடிக்கும்போது அவர் கேட்ட சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார். ரஜினி ஒரு லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் படம் பிரியாrajini

 

அதன்பின் லட்சங்கள் அதிகரித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி மாறினார். இப்போது 100 கோடி வரை அவர் சம்பளம் பெறுகிறார். ஆனால், இதே ரஜினி தன்வாழ்நாளில் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. பேருந்தில் வேலை செய்வதற்கு முன் ஒரு கன்னட பத்திரிக்கையில் பிழை திருத்தும் வேலை செய்து வந்தார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தினமும் 2 ரூபாய். அதாவது மாதத்திற்கு 60 ரூபாய்.

அப்படி வாங்கிய சம்பளத்தை நண்பர்களுக்கு விருந்து வைப்பது, படம் பார்ப்பது என ஜாலியாக செலவு செய்வாராம் ரஜினி. ஒரு நாளைக்கு 2 ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி இப்போது ஒரு நாளைக்கு ரூ.2 கோடியை சம்பளமாக வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.