Cinema News
ஆண்கள் தினம்னா இதுதான் மீம்ஸ்!.. கவுண்டமணியோட இந்த காட்சி உருவானது எப்படி தெரியுமா?…
தமிழ் சினிமாவில் 1977ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கவுண்டமணி. பதினாறு வயதினிலே, கிழக்கு போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் நடிக்க துவங்கி பல படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். ஒரு கட்டத்தில் செந்திலோடு இணைந்து காமெடி செய்ய துவங்கினார்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 85 முதல் 20 வருடங்கள் இவர்களின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் கவுண்டமணி – செந்தில் ஜோடி ரசிகர்களை சிரிக்க வைத்தது.
இதையும் படிங்க: கவுண்டமணியின் வெற்றிக்கு பின்னால் இருந்த அந்த நடிகர்!.. அவர் மட்டும் இல்லன்னா!…
செந்திலோடு இணைந்து மட்டுமல்ல. கவுண்டமணி தனியாகவும் பல திரைப்படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அப்படி ஒரு படம்தான் நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கிய முதல் படமான கன்னி ராசி. பிரபு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார்.
இந்த படத்தில் ரேவதியின் அப்பாவாக கவுண்டமணி நடித்திருப்பார். ‘இந்த வீட்டில உனக்கு மரியாத இல்ல. நானே உனக்கு மரியாதை கொடுக்கிறேன்’ என சொல்லி வீட்டில் இருக்கும் அவரின் போட்டோவுக்கு அவரே மாலை போட்டு விடுவார். ஊரிலிருந்து வரும் பிரபு இதைப்பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக நினைத்து அழுவார். ரசிகரக்ளை ரசிக்க வைத்த காட்சி அது.
இதையும் படிங்க: கவுண்டமணிக்கும் பாரதிராஜாவுக்கும் இப்படி ஒரு பிரச்சினையா? அதிகமாக நடிக்காததற்கு இதுதான் காரணமா?
இப்போது ஆண்கள் தினம் வந்தாலே பெரும்பாலான ஆண்கள் கவுண்டமணி அவருக்கு மாலை போட்டுவிடும் அந்த புகைப்படத்தைத்தான் மீம்ஸாக பயன்படுத்தி வாழ்த்து சொல்கிறார்கள். அதாவது ஆண்களுக்கு வீட்டில் மரியாதையே இல்லாத போது எதற்கு ஆண்கள் தினம்? என்பதுதான் இந்த மீம்ஸின் முழு அர்த்தம்.
இந்த காட்சி பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாண்டியராஜ் ‘என் அப்பா வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு அவரின் போட்டோவுக்கு அவரே மாலை போட்டுவிடுவார். அவரின் போட்டோவுக்கு முன் மெழுகுவர்த்தி பத்த வைப்பார். அதை வைத்துதான் கவுண்டமணிக்கு அந்த காட்சியை வைத்தேன். அது இத்தனை வருடங்கள் கழித்தும் மீம்ஸாக வரும் என அப்போது நான் நினைக்கவே இல்லை’ என சொல்லி சிரித்தார்.
இதையும் படிங்க: காமெடி நடிகருக்காக பாரதிராஜாவிடமே சண்டை போட்ட பிரபல நடிகர்..! கவுண்டமணியை மிஸ் பண்ணவே மாட்டாராம்..!