தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

Published on: December 13, 2023
rajini
---Advertisement---

பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்து வந்த ரஜினிக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்ட சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் சேர்ந்தார். 2 வருட நடிப்பு பயிற்சி பெற்ற பின் பாலச்சந்தரின் அறிமுகம் ஏற்பட்டு அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தார்.

முதல் படமே கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பின் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சி உள்ளிட்ட சில படங்களிலும் ரஜினி நடித்தார். தொடர்ந்து கமலுடன் பல படங்களிலும் நடித்தார். இதில், பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான் ஆகிய படங்கள் முக்கிய படங்களாகும்.

இதையும் படிங்க: சம்பவம் லோடிங்! அடிபட்ட பாம்பு சும்மா விடுமா? வெளியான ‘ரஜினி 171’ படத்தின்புதிய அப்டேட்

ஒருகட்டத்தில் இருவரும் பேசி முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார். ரஜினி பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி அதன்பின் ஹீரோவாக மட்டுமே நடிக்க துவங்கினார். ரஜினியின் படங்கள் வசூலை அள்ளவே தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டனர்.

father

எனவே, சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனது சகோதரனையோ, அப்பாவையோ கொண்டு வரமாட்டார்கள். ஆனால், ரஜினி அப்படி அல்ல. அவர் நடித்த ஒரு படத்தில் அவரின் அப்பாவை போல மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்.

rajini

அந்த திரைப்படம்தான் மூன்று முகம். இந்த படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடித்திருப்பார். இதில், முரடனாக வரும் ரஜினி தனது அப்பா ராமோஜி ராவ் கேக்வாட் தோற்றத்தில் வருவார். இது அவர் விரும்பியே செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அலெக்ஸ் பாண்டியனாக வந்து செந்தாமரையிடம் பன்ச் வசனங்களை பேசி அதிர வைப்பார்.

இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது., இதில், ரஜினி, அமிதாப்பச்சன், கமல் என 3 பேரும் இணைந்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை அழவைத்த பாலச்சந்தர்!.. ஆனாலும் இவ்வளவு கோபம் வரக்கூடாது!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.