மீண்டும் பிக் பாஸ் பிரபலத்துக்கு சான்ஸ் கொடுத்த அஜித்குமார்!.. அவருக்கு ஈக்வலா செம ஸ்லிம்மாகிட்டாரே!..

Published on: December 13, 2023
---Advertisement---

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்களுக்கு தங்கள் படங்களில் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான வாரிசு படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் கணேஷ் வெங்கட் ராம் நடித்திருந்தனர்.

அதே போல அஜித் நடித்த துணிவு படத்தில் பாவனி, அமீர், சிபி உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் நடித்திருந்தனர். ஆயுதபூஜைக்கு வெளியான லியோ படத்தில் நடிகர் விஜய் சாண்டி மற்றும் பிக் பாஸ் ஜனனிக்கு வாய்ப்புக் கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க: அப்பாவ மிஞ்சிய புள்ள! பாட்டு வேணும்னா இங்க வரனும் – யுவன் சங்கர் ராஜாவால் ‘தளபதி 68’க்கு வந்த சிக்கல்

தற்போது, விடாமுயற்சி படத்திலும் நடிகர் அஜித் குமார் ஒரு பிக் பாஸ் போட்டியாளரை தன்னுடன் நடிக்க அனுமதித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் தான்.

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை காதலித்து வந்த நிலையில், வெளியே வந்ததும் இருவரும் பிரேக்கப் செய்துக் கொண்டனர். பின்னர் நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஆரவ். மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜாபீமா படங்களில் ஹீரோவாக நடித்தும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்த நிலையில், இந்த படத்திலும் ஆரவ்வுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

தற்போது, நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆரவ் இப்படியொரு வாய்ப்புக்காக 20 வருஷம் காத்துக்கிடந்தேன். நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் இணைந்து நடிப்பேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் ஆரவ்வுக்கு சமமான உடல் எடையுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.