ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு படத்தின் தலைப்புதான் அப்படத்தின் அடையாளமும் கூட. ஒரு படத்தின் தலைப்பு வைத்துதான் ரசிகர்கள் அப்படத்தை நினைவு கூர்வார்கள். அதனால்தான் ஒரு படத்திற்கான தலைப்பை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக தேர்ந்தெடுப்பார்கள்.
விக்னேஷ் சிவன் இப்போது லவ் டுடே பிரதீப்பை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தை லியோ படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி என பலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். நேற்று இப்படத்தின் பூஜையும் நடந்தது.
இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் வேறலெவல் வில்லன்!.. மகனாக நடிக்கும் பிரபலம்!. பரபர அப்டேட்..
இந்த படத்திற்கு எல்.சி.யூ என தலைப்பு வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த தலைப்பை இவர் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், இதே தலைப்பை 3 வருடங்களுக்கு முன்பே ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது விக்னேஷ் சிவனுக்கு தெரிந்ததும் அவரை தொடர்பு கொண்டு இந்த தலைப்பை எனக்கு கொடுங்கள் என கேட்டுள்ளார்.

ஆனால், தலைப்புக்காக பணம் கொடுப்பது பற்றி அவர் எதுவும் பேசாததால் அவர் ‘பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்குள் இவர் பூஜையன்று இதுதான் டைட்டில் என அறிவித்துவிட்டார். இது அந்த நபருக்கு கோபத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இதுபற்றி பஞ்சாயத்து இப்போது துவங்கியுள்ளது. ஒன்று விக்னேஷ் சிவன் வேறு தலைப்பு வைப்பார்.
அல்லது, அந்த நபரே பணம் வாங்கிக்கொண்டு அந்த தலைப்பு விக்னேஷ் சிவனிடம் கொடுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. அதற்குள் இப்படத்திற்கு பஞ்சாயத்து துவங்கிவிட்டது. லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விடாமுயற்சி ப்ரேக்கில் அஜித் செய்யும் வேலை… கடைசியில் ‘வாவ்’ சொல்லும் பிரபலங்கள்..!
