Cinema History
ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..
பொதுவாக பெரும்பாலான நடிகர்களுக்கு சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது போன்ற பழக்கம் இருக்கும். இது கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில், சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களிலேயே மதுவை அருந்துவார்கள். சில நடிகர்கள் மது அருந்திவிட்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள்.
அப்படிப்பட்ட நடிகர்களை எப்படி எப்படி கையாள வேண்டுமோ அப்படித்தான் கையாள வேண்டும். இல்லையேல் நஷ்டம் தயாரிப்பாளருக்குதான். அவர்களிடம் கோபத்தை காட்டி நடிக்காமல் சென்றுவிட்டால் அவரோடு நடிக்கும் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் வீணாகிவிடும். அதோடு, அன்று படப்பிடிப்புக்கான பணமும் நஷ்டம்தான்.
ஆனால், இதை புரிந்துகொள்ளாமல் ஒரு பிரபல நடிகரிடம் ஒரு தயாரிப்பாளர் நடந்துகொண்டதால் அந்த நடிகர் என்ன செய்தார் என்பது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு. இவரும் 1960 முதல் 80 வரை இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ பட்டம் கொடுத்தது இப்படித்தான்!.. சுவாரஸ்ய தகவல்..
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சிவாஜி, கே.ஆர்.விஜயா நடிப்பில் உருவான படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அபீஸ் பாயை அழைத்து சோடா வாங்கி வர சொன்னார் வாசு. ஆனால், போன பையன் திரும்பிவரவில்லை. அரைமணி நேரம் கழித்து அங்கிருந்த வேறு ஒரு சிறுவனை அழைத்து சோடா வாங்கி வர சொல்லியிருக்கிறார். அந்த சிறுவனும் திரும்பிவரவில்லை.
எனவே மூன்றவதாக ஒருவரை சோடா வாங்க சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர் தயாரிப்பாளரிடம் சென்று இதை சொல்ல அவர் ‘அதெல்லாம் வேண்டாம். நீ போய் வேலையை பாரு’ என சொல்லிவிட்டார். இதை வாசு பார்த்துவிட்டார். இதற்கு முன்பு சோடா வாங்க சென்ற சிறுவர்களையும் தடுத்தது தயாரிப்பாளர்தான் என்பது அவருக்கு புரிந்துவிட்டது.
இதையும் படிங்க: உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா
படப்பிடிப்பு துவங்கியது. அது எல்லோரும் நடிக்கும் மிகவும் நீளமான காட்சி. சிவாஜி, கே.ஆர்.விஜயா என எல்லோரும் சரியாக நடித்துவிட வாசு வசனத்தை மறந்தது போல் நின்றார். இதேபோல் 5 முறை செய்தார். கடைசியாக 6வது முறை சரியாக நடித்தார். இப்போது போல அப்போது டிஜிட்டல் கேமரா இல்லை. பிலிம் ரோலிதான் படம் எடுப்பார்கள். வாசு சரியாக நடிக்காமல் நின்ற காட்சிகளை எடுத்த செலவின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் ரூபாய்.
காட்சி முடிந்த பின் தயாரிப்பாளரிடம் சென்ற வாசு ‘ஒரு சோடா கேட்டேன். ஒரு ரூபாய் கணக்கு பாத்தீங்க.. நீங்க அத பண்ணாம இருந்திருந்தா உங்களுக்கு இவ்ளோ நஷ்டம் வந்திருக்காது’ என சொன்னாராம்.
இதையும் படிங்க: dhaசினிமாக்காரனை கொண்டு வந்து அரசியல்ல நிறுத்தாதே!… அப்போதே சொன்ன எம்.ஆர்.ராதா