Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். மிகவுன் மென்பட்டவராக சமீபகாலங்களில் காணப்படும் தனுஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றனர். அதுவும் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் வித்தியாசமான கதைகளமாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் தனுஷின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோபத்தில் சினிமாவுக்கு வந்த ஆதிக் ரவிச்சந்திரன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட் ஃபிளாஷ்பேக்கா!..
அடுத்ததாக அவருடைய 50வது படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
சரத்குமாரை வைத்து எடுக்கும் அந்தப் படத்தில் சரத்குமாரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்ட இருக்கிறாராம் தனுஷ். இது சம்பந்தமான அறிவிப்பை நேற்று ராதிகா தனதுசமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இப்போதைக்கு அந்த படத்திற்கு DD3 என பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செழியன் பிரச்னைக்கு எண்ட் கார்ட் போட்ட பாக்கியா… ஆனா கோபிக்கு பிரச்னை ஆன் தி வே.. ஹப்பாடா..!
அடுத்ததாக அவர் 51 வது படத்தின் வேலைகளில் இறங்குவார். அந்தப் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் ஒரு படத்திலும் அடுத்ததாக மாரி செல்வராஜ், அருண்மாதேஸ்வரன் ஆகியோர் கூட்டணியில் மறுபடியும் அடுத்தடுத்த படங்களில் இணைய இருக்கிறார்.
இதற்கடுத்தபடியாக இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னும் அறிவிப்பு வராத ஒரு சில ப்ராஜக்ட்களும் இருக்கின்றன. வெற்றிமாறன், எலன், எச்.வினோத், நெல்சன் ஆகியோருடனும் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட 10வருஷத்திற்கு பிஸியாக இருக்கும் ஒரே நடிகராக தனுஷ்தான் இருப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!
