ரகுவரன் நடிக்கும் போது பிரகாஷ்ராஜ் இப்படி பண்ணுவாருனு நினைக்கல! இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்

Published on: December 18, 2023
pra
---Advertisement---

Actor Raghuvaran: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோவுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு முக்கியத்துவம் 90கள் காலகட்டம் வரை  கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு ஹீரோக்களின் மார்கெட் அதிகரிக்க அதிகரிக்க மற்ற கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

சமீப காலமாக வில்லன்களுக்கு உண்டான அந்த மதிப்பே இல்லாமல் தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக லியோ படத்தையே எடுத்துக் கொள்ளலாம். சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் போன்றவர்கள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள். ஆனால் இந்தப் படத்தில் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்பது போல்தான் இருந்தது.

இதையும் படிங்க: திடீரென வீட்டிற்குள் போகும் கமல்! பிக்பாஸில் நடந்த அதிரடியான சம்பவம் – கதிகலங்கிய போட்டியாளர்கள்

வில்லனாலே பவர் பேக் பெர்ஃபாமன்ஸாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் நம்பியார், ரகுவரன், பிரகாஷ் ராஜ். அதில் என்றுமே மறக்க முடியாத வில்லன் நடிகராக இருப்பவர் ரகுவரன். அவர் மறைந்தாலும் அவருடைய நடிப்பிற்கு ஈடுகொடுக்க இதுவரை எந்த நடிகரும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான தயா செந்தில் ரகுவரனை பற்றி ஒரு பேட்டியில் கூறினார். அவர் முதலில் தயா என்ற படத்தைத்தான் இயக்கினார். அதில் பிரகாஷ்ராஜ் லீடு ரோலில் நடிக்க ரகுவரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அப்பா இருந்தபோது இருந்த ரஜினி கமல் வேற!.. இப்ப வேற!.. மனம் திறக்கும் பாலச்சந்தர் மகள்…

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் பிரகாஷ்ராஜின் ஷாட் முடிந்தாலும் அவர் வீட்டிற்கு போகமாட்டாராம். அடுத்த ஷாட் ரகுவரனை வைத்து எடுத்துக் கொண்டிருப்பார்களாம். அதை மறைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பாராம் பிரகாஷ்ராஜ்.

அவர் எப்படி நடிக்கிறார்? டையலாக் டெலிவரி எப்படி செய்கிறார் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நோட்டமிட்டுக் கொண்டே இருப்பாராம். அப்படி ரகுவரன்  நடிக்கும் போது அந்த சீனில் வசனமே கிடையாதாம். தலையை மட்டும் அசைத்து தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டுமாம்.

இதையும் படிங்க: சைனிங் அழகை பாத்தாலே மூடு மாறுது!.. சண்டே ஃபுல் ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா…

கேமிரா ரகுவரன் முகம் அருகே போக அதே மாதிரி யாரும் எதிர்பார்க்காத ஒரு பெர்ஃபாமன்ஸை கொடுத்தாராம் ரகுவரன். மையான அமைதியாக இருந்த ஸ்பாட்டில் தொடையை தட்டியபடி தட்டி தூக்கிட்டார், தட்டி தூக்கிட்டார் என்று சொல்லியவாறே பிரகாஷ் ராஜ் ரகுவரன் நடிப்பை பார்த்து மிரண்ட போடி சென்று கொண்டிருந்தாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.