தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் நடித்துவரும் படங்கள் பற்றியும் சரி, அடுத்து நடிக்கப்போகும் புதிய படம் பற்றிய செய்திகளும் சரி எப்போதும் பரபரப்புதான். அவர்களின் ரசிகர்களும் அதை பெரிதும் விரும்புகிறார்கள். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரசிகர்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்றாலும் படம் நல்ல வசூலை பெற்றதாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு பின் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கேப்டனால மட்டும் விஜய் வரல! நானும்தான் நடிச்சுக் கொடுத்தேன் – சூசகமாக சொன்ன மூத்த நடிகர்
இது விஜயின் 68வது திரைப்படமாகும். இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்ஷி சவுத்ரி, சினேகா என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், தொழில் நுட்ப உதவியுடன் விஜயை மிகவும் இளமையாகவும் காட்டவிருக்கிறார்கள். ஒருபக்கம், விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் பட்டியலில் ஷங்கர், அட்லீ என பலரின் பெயர்கள் அடிபட்டது.
இதையும் படிங்க: என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?
ஆனால், இப்போது கார்த்திக் சுப்பாராஜ் பெயர் அடிபடுகிறது. கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியவர். இவரின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

ஏற்கனவே, 2 முறை விஜய்க்கு கதை சொல்லியும் செட் ஆகவில்லை என கார்த்திக் சுப்பாராஜ் சொல்லியிருந்த நிலையில் இப்போது அவரின் இயக்கத்தில் விஜய் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகவுள்ளது. அதோடு, இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சமீபத்திய படங்கள் சொதப்பியதுக்கு புது காரணம் சொன்ன ப்ளூசட்டை மாறன்.. அட ஆமாப்பா..! சரியா தான் இருக்கு!
