தளபதி 68ல் களமிறங்கும் கவர்ச்சி புயல்!.. அட அப்ப ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான் போல!..

Published on: December 18, 2023
Vijay
---Advertisement---

Thalapathy 68: லியோ படத்துக்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் விஜயுடன் இணைந்து நடிக்கிறார்கள். மேலும், சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க மீனாக்‌ஷி சவுத்ரி எனும் நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் என்றாலும் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் மாடல் அழகியாக நடித்தவர். இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், அம்மணி அழகாக இருப்பார் என்பதால் இவரை கொத்தாக தூக்கிவிட்டனர். மீனாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்ப்பது என்பது காஜி ரசிகர்களுக்கு எப்போதும் விருந்துதான்.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை லாக் செய்த விஜய்!. தளபதி 69 பரபர அப்டேட்.. அப்ப ஹிட் கன்பார்ம்!..

இந்த படத்தில் மிகவும் சிறு வயது விஜயை காட்டவுள்ளனர். இதற்காக ஹாலிவுட்டில் பயன்படுத்தும் டீ ஏஜிங் எனும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடக்கவுள்ளது.

malavika

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜயின் தங்கையாக லவ் டுடே இவானா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் அவர் நடிக்கவில்லை என சொல்லப்பட்டது. இப்போது, இப்படத்தில் மாளவிகா சர்மா எனும் ஒரு கவர்ச்சி புயல் களம் இறங்கியுள்ளது.

இதையும் படிங்க: என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?

மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிரமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாம் அதிரும். ஏனெனில், அரைகுறை உடைகளில் கவர்ச்சியை காட்டி திணறவைப்பார். இந்த படத்தில் அவருக்கு என்ன வேடம் என்பது தெரியவில்லை.

malavika

ஒருவேளை இவானா இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் விஜயின் தங்கையாக நடிக்க போகிறாரா என்பது போகபோகத்தான் தெரியவரும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.