வில்லனாலே மாஸுனு யாரு சொன்னா? 3 காமெடி நடிகர்கள் சேர்ந்து வில்லனாக நடித்த படம் தெரியுமா?

Published on: December 19, 2023
sen
---Advertisement---

Villain Role: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு ஒரு முக்கியத்துவத்தை வில்லன் ரோலுக்கும் கொடுக்க வேண்டும். அதை பெரும்பாலும் நம்பியார் மற்றும் ரகுவரன் வில்லனாக நடித்த பெரும்பாலான படங்களில் பார்க்க முடியும்.

குறிப்பாக ரகுவரன் வில்லனாக நடித்த பல படங்களில் ஹீரோவுக்கு கொடுக்கிற அதே வரவேற்பைத்தான் இவருக்கும் கொடுத்திருப்பார்கள். பாட்ஷா படத்தில் ரஜினி வரும் சீனுக்கும் கைத்தட்டல்கள் இருக்கும். அதே மாதிரி ரகுவரன் வரும் சீனுக்கும் கைத்தட்டல்கள் அதிகமாகவே இருந்தது.

இதையும் படிங்க: இப்பவும் உதவாத உச்ச நட்சத்திரங்கள்!.. இவங்களுக்கு பாலாவே பல படி மேல்!..

இப்படி வில்லன் கதாபாத்திரத்திற்கு என்று ஒரு தனி அந்தஸ்தே இருக்கின்றன. சமீப காலமாக பல முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய் சேதுபதி பேட்ட படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவரின் மார்கெட்டே உயர்ந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவே நடித்து வருகிறார். இது கோலிவுட்டிற்கு மட்டும் பொருந்தாது. மற்ற மொழி சினிமாக்களிலும் முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க இறங்கி விட்டனர். இப்படி வில்லன் கதாபாத்திரத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கும் போது,

இதையும் படிங்க: கேஜிஎஃப் கனெக்‌ஷன் சலார் படத்தில் இருக்கா..? நச் பதிலால் வாயடைக்க செய்த பிரசாந்த் நீல்..!

ஒரு படத்தில் மூன்று காமெடி நடிகர்கள்தான் வில்லனாக நடித்திருக்கின்றனர்.  ‘சங்கநாதம்’ என்ற படம் ராஜேஷ் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம். அதில் செந்தில், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ் போன்றவர்கள்தான் வில்லனாக நடித்திருப்பார்கள்.

இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் செந்தில் கூறும் போது வில்லனாக நான் அப்பவே இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்று பெருமையாக கூறினார்.

இதையும் படிங்க: செஞ்சி வச்சி சிலை மாதிரி உடம்பு!.. ரசிகர்களை சொக்க வைக்கும் தளபதி 68 பட நடிகை…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.