என்னிடம் விஜயகாந்த் சொன்னதை எந்த நடிகரும் சொல்லமாட்டார்!.. உருகும் ஆனந்தராஜ்…

Published on: December 19, 2023
anandaraj
---Advertisement---

Actor vijayakanth: திரையுலகில் விஜயகாந்தை பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் அவரின் எளிமை, ஈகோ இல்லாமல் எல்லோரிடம் பழகும் விதம், அவரின் நல்ல மனம், இரக்க குணம், மற்றவர்களுக்கு உதவும் குணம் என எல்லாவற்றையும் சொல்லலாம். அவரிடம் உதவி என கேட்டுவிட்டால் உடனே வேட்டையை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கிவிடும் குணம் படைத்தவர் அவர்.

அதனால்தான், இப்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்கிறார்கள். திரையுலகில் பலரையும் வளர்த்துவிட்டவர் விஜயகாந்த். பல புதிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இதனாலதான் விஜயகாந்த் இப்படி ஆயிட்டான்!.. கேப்டனின் உடல்நிலை மீது ஆதங்கப்பட்ட ராதாரவி..

சரத்குமாரை புலன் விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகம் செய்து வைத்தவர் விஜயகாந்துதான். அதேபோல், அவரை முதலில் ஹீரோவாக நடிக்க வைத்து படத்தை தயாரித்ததும் விஜயகாந்துதான். அதேபோல், கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகம் செய்து வைத்தவரும் விஜயகாந்துதான்.

அதேபோல், ஆனந்தராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்த் படங்களில் அவருக்கு கிடைத்த முக்கியத்துவம் அவருக்கு வேறு படங்களில் கிடைக்கவில்லை. புலன் விசாரணை, மாநகர காவல் என பல திரைப்படங்களில் விஜயகாந்துக்கும் அவருக்கும் ஒன் டூ ஒன் சண்டை இருக்கும். இதில்தான் ஆனந்தராஜ் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

anandaraj
anandaraj

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆனந்தராஜ் ‘விஜயகாந்தை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவர் மரியாதைக்குரிய மனிதர். அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘யோவ் நீதான் நம்பர் ஒன். உனக்கு அடுத்ததுதான் நான். சூப்பரா நடிச்சிருக்க’ என என்னிடம் சொல்லுவார்.

இப்படி சொல்ல எத்தனை ஹீரோக்களுக்கு மனசு வரும் சொல்லுங்கள். இப்போது இருக்கும் ஒரு ஹீரோ கூட அதை சொல்ல மாட்டார். அவர் சொல்வதில் உண்மை இல்லை என்றாலும் அப்படி சொல்ல ஒரு மனம் வேண்டும். விஜயகாந்திடம் அந்த மனம் இருந்தது’ என அவர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் பத்தி பொய் நியூஸ் சொல்லியே கொன்னுட்டீங்களேடா!.. மன அழுத்தத்தால் இறந்த ரசிகர்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.