சிவாஜி கன்னத்தில் பளாரென அறைந்த நடிகை!.. மனுஷனுக்கு என்ன ஆச்சி தெரியுமா?…

Published on: December 19, 2023
---Advertisement---

நடிகர் சிவாஜிக்கு நடிப்புதான் எல்லாமே. அவரின் சுவாசம், வாழ்க்கை என எல்லாமே நடிப்புதான். அதனால்தான் நடிப்பு என்பது அவரின் உடலில் இரண்டற கலந்து போனது. நடிப்பின் மீது இருந்து ஆர்வத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களாக வாழ்வது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனவே, அவற்றை மிகவும் அனுபவித்து செய்தார் அவர். அதனால்தான் நடிகர் திலகமாகவும் அவர் மாறினார். அவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகர்களுக்கு நடிப்பை சொல்லிக்கொடுக்கும் இலக்கணமாகவும் அவர் மாறினார். சிவாஜி நடிக்க துவங்கிய புதிதில் நடிகை பத்மினியுடன் பல திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?…

அப்படி ஸ்ரீதரின் கதை வசனத்தில் சித்ரப்பு நாராயண ராவ் என்பவரின் இயக்கத்தில் சிவாஜியும், பத்மினியும் இணைந்து நடித்த திரைப்படம்தான் ‘எதிர்பாராது’. இந்த படம் 1954ம் வருடம் வெளியானது. இந்த படத்தின் கதைப்படி சிவாஜியும், பத்மினியும் காதலிப்பார்கள். ஒருகட்டத்தில் சிவாஜி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும்.

அப்படி அவர் போயிருக்கும் சூழ்நிலையில் சிவாஜியின் அப்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் பத்மினிக்கு ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வந்த சிவாஜி இதைப்பார்த்து அதிர்ச்சி அடைவார். ஒருநாள், இருவரும் தங்களை மறந்து கட்டியணைத்து கொள்வார்கள்.

இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?

ஆனால், சுதாரிக்கும் பத்மினி சிவாஜியின் கன்னத்தில் பளாரென அறைய வேண்டும். இதுதான் காட்சி. ஆனால், சிவாஜி கன்னத்தில் அடிக்க பத்மினி தயங்கினார். ஆனால், இது நடிப்பு மட்டுமே என சொல்லி அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார் சிவாஜி. ஆனால், பத்மினி விட்ட அறையில் கலங்கிப்போனார் சிவாஜி.

Padmini. Sivaji2
Padmini. Sivaji2

அது எப்படிப்பட்ட அடியெனில், சிவாஜிக்கு காய்ச்சலே வந்துவிட்டதாம். 3 நாட்கள் வீட்டில் இருந்தார் சிவாஜி. இதை கேள்விப்பட்டு நம்மால்தான் சிவாஜிக்கு இப்படி ஆனது என துடித்துப்போன பத்மினி சிவாஜிக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்ததோடு, அவருக்கு ஒரு காரையும் பரிசாக வழங்கினாராம்.

இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர் ஒரு செம கமெண்ட் அடித்தார். அதை செய்தியில் சொல்கிறோம்.

இதையும் படிங்க: விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.