Cinema History
பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் திரையில் அவருக்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக பார்க்கப்பட்டவர் பத்மினிதான். நாட்டிய பேரொளி என்கிற பெயரெடுத்தவர். இவர் அளவுக்கு பரதநாட்டியத்தை சிறப்பாக ஆடிய நடிகைகள் மிகவும் குறைவு. இருவரும் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் தமிழ் சினிமாவின் எவர் கிரீன் திரைப்படமாகும்.
சிவாஜி ஒரு ஹீரோவாக வளர்ந்த காலத்தில் அவருடன் பல திரைப்படங்களில் பத்மினி நடித்திருக்கிறார். தெய்வப்பிறவி, பணம், மரகதம், இரு மலர்கள், திருமாள் பெருமை, புனர் ஜென்மம், எதிர்பாராதது, தேனும் பாலும், அமர தீபம், மங்கையர் திலகம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையும் படிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்ஷன் என்ன தெரியுமா?…
இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் மீது சொல்ல முடியாத காதல் இருந்ததாகவும், ஆனால், இதை விரும்பாத பத்மினியின் பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் ஒரு கதை உண்டு. பத்மினி மிகச்சிறந்த நடிகை. பிரகாசமான முக அழகை கொண்டவர். அவர் அழுதால் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கும் கண்ணீர் வரும்.
அந்த அளவுக்கு தத்ரூபமாக நடிப்பார். அப்படி அவர் நடிப்பதே சிவாஜிக்கு ஒரு முறை பிரச்சனையாக அமைந்தது. ‘எதிர்பாராதது’ என்கிற படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் சிவாஜியின் கன்னத்தில் பத்மினி கோபமாக அறைய வேண்டும். ஆனால், என்னால் அப்படி நடிக்க முடியாது என பத்மினி மறுக்க சிவாஜி அவரை கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்தார்.
இதையும் படிங்க: முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!…
இயக்குனர் ஆக்ஷன் என சொன்னதும் பத்மினி பளாரென விட்ட அறையில் சிவாஜிக்கு கதி கலங்கிவிட்டது. மூன்று நாட்கள் அவர் காய்ச்சலில் படுக்கும் அளவுக்கு இருந்தது அந்த அறை. நம்மால்தான் சிவாஜிக்கு இந்த நிலை என வருத்தப்பட்ட பத்மினி அவரை நேரில் சென்று ஆறுதல் சொல்லியதோடு அவரை உற்சாகப்படுத்த ஒரு புதிய காரையும் பரிசாக கொடுத்தார்.
இந்த செய்தி திரையுலகில் பரவியது. இந்த படத்திற்கு பின் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்க பத்மினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அந்த இயக்குனரிடம் ‘இந்த படத்திலும் பத்மினி என்னை அறைவது போல் ஒரு காட்சி வையுங்கள். எனக்கும் கார் கிடைக்கும்’ என நகைச்சுவையாக சொன்னாராம் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?