Cinema History
நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பேருந்து நடத்துனர் வேலையை விட்டுவிட்டு சென்னை வந்த ரஜினி திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தார். அப்படி படிக்கும்போது பாலச்சந்தரின் இயக்கங்களில் வெளிவரும் திரைப்படங்களை பார்த்து அவருக்கு ரசிகராக மாறியிருந்தார்.
எனவே, அவரை ஒருமுறையாது சந்தித்து பேசிவிட வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசையாக இருந்தது. ஆனால், பின்னாளில் அவரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் பல படங்களில் தான் நடிப்போம் என ரஜினி கனவு கூட காணவில்லை. ஒருநாள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாலச்சந்தர் ரஜினியை பார்த்துவிட்டு அவருக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை உணர்ந்தார்.
இதையும் படிங்க்: வீட்டுக்கு வந்த பிரபலத்தின் காலை அளவெடுத்த ரஜினி.. மனுஷன் இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..
அப்போதே ரஜினியை தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவும் செய்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை அறிமுகம் செய்து வைத்த பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை படத்தின் தெலுங்கு ரீமேக், மூன்று முடிச்சி என தொடர்ந்து ரஜினியை தனது படங்களில் நடிக்க வைத்து ஒரு நடிகராக மாற்றினார். அதன்பின் தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் தில்லு முல்லு, நெற்றிக்கண் ஆகிய படங்களில் ரஜினியை இயக்கினார்.
ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்கிற இமேஜ் ஏற்பட்டு ஹீரோயிசம் உள்ள கதைகளில் மட்டுமே அவர் நடிக்க துவங்கியபின் பாலச்சந்தர் அவரை வைத்து படமெடுக்கவில்லை. ஆனால், அவரின் தயாரிப்பில் புது கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, அண்ணாமலை, முத்து, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி நடித்தார்.
இதையும் படிங்க: இவனுக்கு நடிப்பே வராது.. அந்த நடிகரை கூட்டி வாங்க!.. ரஜினியை மோசமாக திட்டிய பாலச்சந்தர்…
ஒருமுறை ரஜினி பற்றி பேசிய பாலச்சந்தர் ‘நான் அறிமுகப்படுத்திய ரஜினி வேறு. இப்போதிருக்கும் ரஜினி வேறு. ஒவ்வொரு காலகட்டத்தில் அவர் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என நான் அவருக்கு சொல்லித்தரவில்லை. சரியாக திட்டமிட்டு அதை நோக்கி போனவர் ரஜினி. நான் அவரை அறிமுகப்படுத்தினேன். நான்தான் அவரை வாழவைத்தேன் என எல்லோரும் சொல்கிறார்கள்.
அதுஒரு காலகட்டம். ஆனால், பின்னாளில் என்னை அவர் வாழ வைத்தார் என்பதுதான் உண்மை. நான் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட போதெல்லாம் என்னை மீட்டவர் அவர். என்னுடைய நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்து எனக்கு உதவினார். இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என பாலச்சந்தர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினியின் மனதுக்குள் சினிமா ஆசையை விதைத்த தோழி!.. இதுவரை வெளிவராத தகவல்!..