மன்சூர் அலிகானுக்கு பொடணியில் போட்டு அனுப்பிய நீதிமன்றம் .. அபராதம் இவ்வளவு பெரிய தொகையாம்…!

Published on: December 22, 2023
---Advertisement---

Mansoor Alikhan: மன்சூர் அலிகான் தேவையே இல்லாமல் சில விஷயம் செய்வார் என்பதுக்கு சமீபத்திய விஷயம் உதாரணமாகி இருக்கிறது. நீதிமன்றத்திலேயே பல்ப் வாங்கி வந்து இருக்கும் தகவலால் ரசிகர்களே செம காமெடியாக்கி அவரை கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

லியோ படத்தில் மன்சூர் அலிகானும், த்ரிஷாவும் நடித்திருந்தனர். அதில் த்ரிஷாவை தன் கண்ணிலே காட்டவில்லை. அவரை கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். 150 படங்கள் நிறைய பண்ணி இருக்கேன் என தரக்குறைவாக நிறைய பேசினார் மன்சூர் அலிகான். இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டது.

Also Read

இதையும் படிங்க : அந்த நடிகை வீடியோவதான் மொபைல்ல பாத்துக்கிட்டே இருப்பேன்!.. ராஜமவுலிக்கு இப்படி ஒரு ஆசையா?..

அதை பார்த்த நடிகை த்ரிஷா முதல் ஆளாக குரல் கொடுத்தார். அந்த வீடியோவில் மன்சூர் அலிகான் பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது. அவர் மாதிரி ஒருவருடன் இனி நடிக்கவே மாட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த போஸ்ட் வைரலானதை அடுத்து பல இயக்குனர்களும், நடிகை குஷ்பூ, நடிகர் சீரஞ்சிவி கூட அவருக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.

ஆனால் அப்போதும் மன்சூர் அலிகான் என் மீது தப்பே இல்லை. நான் பேசியதை தப்பாக எடிட் செய்து இருக்கின்றனர் எனக் காட்டமாகவே பேசினார். ஒரு கட்டத்தில் அவர் சக நடிகை த்ரிஷாவே மன்னித்துவிடு என அறிக்கை விட்டார். த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வீகம் என போஸ்ட் போட்டு பிரச்னையை முடித்துவிட்டார்.

இதையும் படிங்க : வைரலாக நினைத்து மோசமா இறங்கிய பிக்பாஸ் தனலட்சுமி.. ஏம்மா நீ இன்னும் திருந்தவே இல்லையா..

இந்நிலையில் இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என காட்டமாகவே கண்டித்து இருக்கிறது.