ஷூட்டிங்குக்கு பல மணி நேரம் லேட்டா வந்த கமல்! திட்டமுடியாமல் தவித்த கே.பி – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

Published on: December 24, 2023
kamal
---Advertisement---

Actor Kamal:உலக நாயகன் என்ற பெயருக்கு உண்மையாகவே சொந்தக்காரர்தான் கமல். சமீபகால சாதனைகளால் அவருக்கு இந்த பெயர் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர் சினிமா பயணத்தை ஆரம்பித்த காலத்திலேயே பெரும் ஆற்றல் கொண்டவராகத்தான் இருந்திருக்கிறார்.

அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இருந்தாலும் நடிகர் கவிதாலயா கிருஷ்ணா கூறிய ஒரு சம்பவம் பெரும் ஆச்சரியத்தை தந்தது. ரஜினி, கமல் இவர்களுடன் அதிக படங்களில் நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணா. அவர்கள் இருவருடனும் நெருங்கி பழக கூடிய ஒரு நடிகரும் ஆவார்.

இதையும் படிங்க: கடைசி வரை கண்டுக்காத வடிவேலு!.. வீட்டிலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்த போண்டா மணி

பாலசந்தர் ட்ரூப்பில் இருந்தவர். ஒரு சமயம் தெலுங்கு படத்தின் ரீமேக்கை படமாக்கிக் கொண்டிருந்தாராம் பாலசந்தர். அதில் கமலுக்கு ஒரு சிறிய வேடமாம். நடிகை ஜெயப்பிரதாவும் அந்தப் படத்தில் இருந்தாராம். ஜெயப்பிரதாவை சூட்டிங் முடிந்ததும் சீக்கிரமாக அனுப்பவேண்டிய நிலை என்பதால் அதிகாலையில் படப்பிடிப்பு என்று சொல்லப்பட்டிருந்ததாம்.

ஆனால் கமல் அன்று மதியம் 2 மணிக்குத்தான் வந்தாராம். கடுங்கோபத்தில் இருந்தாராம் பாலசந்தர். அவனை அப்புறம் வச்சிருக்கேன் என்று டையலாக் பேப்பர் கமலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் ஒவ்வொரு ஏரியா இருக்குமாம். அங்கு பேசும் மொழியும் வெவ்வேறு விதமாக இருக்குமாம்.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு ரெண்டு படம்னாலும் அடைக்கமுடியாதே! கௌதம் மேனனுக்கு இவ்வளவு கோடி கடனா?

இங்கு திருநெல்வேலி பாஷை , மதுரை பாஷை மாதிரி ஆந்திராவிலும் வெவ்வேறு விதமான பாஷைகளாம். அப்படி ஒரு 5 நடிகர்களிடம் 5 பாஷைகளில் பேசுகிற மாதிரியான டையலாக்காம். அந்த டையாக்கை கமல் படித்து விட பாலசந்தர் ஒரு மானிட்டர் போலாம் என்று சொன்னாராம்.

அதற்கு கமல் டேக் போய்விடலாம் என்று சொல்லியிருக்கிறார். தனித்தனி ஷாட்டாக எடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தாராம் பாலசந்தர். ஆனால் கமல் லேட்டாக வந்ததால் ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டிய கட்டாயம். கமல் நேரடியாக டேக் என்று சொன்னதும் ஒரே டேக்கில் அந்த முழு வசனத்தையும் பேசி முடித்து விட்டு உட்கார்ந்துவிட்டாராம் கமல். இதை பார்த்ததும் பாலசந்தர் இவன எப்படி நான் திட்ட முடியும் என சொல்லிவிட்டு ஜெயப்பிரதாவையும் அனுப்பி விட்டாராம்.

இதையும் படிங்க: இந்த வருஷம் வெளியான 254 படத்துல இத்தனை படம் தான் தேறுச்சு!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.