கேரவனில் சரக்கடித்த அஜித்!.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!.. நம்மாளுங்க என்ன பண்ணாங்க தெரியுமா?…

Published on: December 24, 2023
Ajith 23
---Advertisement---

படப்பிடிப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது கேரவன் தான். நடிகர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப இந்த கேரவன்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். தெலுங்கு நடிகர் பிரபாஸ்க்கு உயர்தரமான கேரவனாம். அது போல தமிழ்ப்படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு இப்படிப்பட்ட சிறப்பான கேரவன்கள் இருக்கும்.சில உயர்தர கேரவன்களில் வீட்டைப் போல சகல வசதிகளும் இருக்குமாம். நடுத்தர நடிகர்களுக்கு கேரவன்கள் என்றால் 2 அல்லது 3 நடிகர்கள் பயன்படுத்தும் அளவு ஒரு கேரவன் 3 கதவுகளுடன் இருக்குமாம்.

சில நடிகர்கள் கேரவனில் வைத்து யாரையும் சந்திக்க மாட்டார்களாம். வசூல் ராஜா எம்பிபிஎஸ் படப்பிடிப்பின்போது கேரவனில் இருந்த கமல் தன்னை சந்திக்க வந்த ஒரு பிரபலத்தை கேரவனில் வைத்து சந்திக்காமல் வெளியில் காற்றோட்டமாக இருந்து பேசி அனுப்பி வைத்தாராம். அந்த வகையில் சூட்டிங்கில் கேரவன்களுக்கு என்று முக்கிய பங்கு உண்டு.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?

இன்னும் சொல்லப்போனால் கேரவன்லயே பயணம் செய்பவர் ரகுவரன். சொந்தமாக கேரவனையே வாங்கி விட்டாராம். அந்த வகையில் அஜீத் என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போது கேரவனில் வைத்து சரக்கு அடித்தாராம்.

அவரது கேரவனில் ஒரு கிளாஸ்ல பாதி சரக்கு இருந்ததாம். அந்த நேரத்தில் அந்த விஷயம் ரொம்ப பரபரப்பாகவே பேசப்பட்டதாம். அந்த கிளாஸை படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் எல்லாம் வைரலாக்கினார்களாம். அஜீத் நினைத்திருந்தால் அந்த இடத்தில் இருந்த கிளாஸை மறைத்து இருக்கலாம்.அஜீத் ரொம்பவே ஓபன் டைப். அப்போது அவருக்கு வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில் ஆதரவாகவும் பலர் பேசினார்களாம்.

கேரவன் ஒவ்வொரு நடிகருக்கும் அவரது ரேஞ்சுக்கு ஏற்ப தரமானதாக இருக்கும். படப்பிடிப்பின் போது அது அவருக்கு என்று கொடுக்கப்பட்ட பிறகு அந்த கேரவனில் சுதந்திரமாக இருப்பது அவரது தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

மேற்கண்ட தகவல்களை பிரபல சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2023ல் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்கள்.. மனதை கவர்ந்த ‘மாமன்னன்’…

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.