ஐய்யயோ இதனால்தாங்க நான் ஓடுனேன்! லீக் வீடியோவுக்கு விளக்கம் சொன்ன விஷால்…

Published on: December 26, 2023
vishal
---Advertisement---

Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதி என்ற பட்டத்தோடு வலம் வரும் நடிகர் விஷால்.  செல்லமே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் நடிகர் அர்ஜூனுடன் வேதம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

தமிழ் சினிமாவில் பல காலமாக திருமணமாகாத ஒரு சிங்கிள் பேச்சுலராகவே வாழ்ந்து வருகிறார் விஷால். ஆனால் நிச்சயம் வரை சென்று அந்த திருமணமும் நின்று போனது. அதன் பிறகு திருமணமே செய்யாமல் இன்று வரை இருக்கிறார்.

இதையும் படிங்க: ராதிகாவையும் சரத்குமாரையும் அழவைத்த ரஜினி!. என்ன நடந்ததுன்னு தெரியுமா?

ஆனால் அவரிடம் இதை பற்றி கேட்கும் போதெல்லாம்  நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே என்னுடைய திருமணம் என்று இன்று வரை சொல்லிவருகிறார். இந்த நிலையில் இன்று விஷாலின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் அவர் நியூயார்க்கில் இருந்து ஒரு பெண்ணுடன் தோள் மேல் கை போட்டு போவது மாதிரியும் அதை வீடியோ எடுத்ததை விஷால் பார்த்ததும் தலையை மூடிக் கொண்டு ஓடுவது மாதிரியும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கின்றது.

இதையும் படிங்க: என் கூடலாம் நடிக்க மாட்டீங்களா?!.. ஏக்கமா கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!.. தனுஷ் சொன்னது இதுதான்!..

ஆனால் உண்மையிலேயே அது சம்பந்தமான காரணமும் வெளியாகியிருக்கின்றது. வருடத்திற்கு ஒருமுறை விஷால் வெளி நாடு செல்வது வழக்கமாம். அங்கு  அவருடைய கசின் பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் இருக்கிறார்களாம். அவர்களுடன் ஜாலி பண்ணுவதை காமெடியாக வீடியோ எடுப்பாராம்.

அந்த வகையில்தான் இப்போது வைரலான வீடியோவும் கூட. அதை அவரே காமெடிக்காக எடுத்த வீடியோவாம். வைரலாக்கவே அதை எடுத்ததாக சில செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: ’நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடல் இந்த நடிகருக்கு தான் இசையமைத்தேன்.. ஜிவி சொன்ன ஷாக் நியூஸ்..!

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.