சொல்லாமல் கொள்ளாமல் உதவும் குணம் எல்லோரிடமும் இருப்பதில்லை. அப்பேர்ப்பட்ட பெருங்குணம் ஒரு சிலரிடம் தான் இருக்கும். அவர்களில் ஒருவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் செய்த அந்த உதவி என்ன என்பதை பார்க்கலாமா…
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த படம் ஜக்குபாய். இந்தப்படத்தின் போஸ்டர் கூட ரஜினியின் போஸ் உடன் வெளியானது. ஆனால் என்ன காரணமோ, ரஜினி அந்தப்படத்தில் நடிக்கவில்லை. அந்தப் படத்தை தயாரித்தது ராதிகா. அந்தப் படத்திற்கும் பிரச்சனை ஒன்று வந்து விட்டது. படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியாகி விட்டது. அதுமட்டும் அல்லாமல் படத்தைக் கேசட் போட்டு விற்கவும் செய்தார்களாம்.

தமிழ்த்திரை உலகமே ஸ்தம்பித்து நின்றது. என்னடா இது நம் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிட்டதே என தயாரிப்பு தரப்பு குழம்பிப் போய் தவித்தது. படமே திரையரங்கிற்கு வராத போது ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்? நெட்டில் பார்த்த ரசிகர்கள் யாராவது தியேட்டரில் ரிலீஸ் ஆனால் வருவார்களா? பெரிய நஷ்டம் அல்லவா வரும்? இனி எப்படி தியேட்டரில் ரிலீஸ் செய்வது? நஷ்டத்தை சமாளிப்பது என்று கையைப் பிசைந்தது தயாரிப்பு தரப்பு.

அந்த நேரத்தில் ரஜினிகாந்த் ராதிகாவுக்கு போனில் அழைத்துப் பேசியுள்ளாராம். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. பணத்தை நான் தருகிறேன். படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க என்றாராம். இதை சிறிதும் எதிர்பாராத ராதிகா நெகிழ்ந்து போனாராம்.
மறுநாள் பிரஸ்மீட்டில் ராதிகாவும், சரத்குமாரும் அழுதார்களாம். அப்போது ரஜினியும் அங்கு இருந்துள்ளார். அதன்பிறகு படமும் ரிலீஸானது. படம் சுமாராய் போனது. ரஜினியைப் பொருத்தவரை வெளியில் சொல்லாமல் பல உதவிகளைச் செய்வாராம். ராதிகாவே ஒரு டிவி பேட்டியில் எங்களுக்கு முதல் ஆளாக உதவ முன் வந்தவர் ரஜினி சார் தான் என்றாராம்.
2010ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியானது ஜக்குபாய். இதில் சரத்குமார், ஷ்ரேயா, ஸ்ரீஷா, கவுண்டமணி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இது வசாபி என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக் என்கிறார்கள்.
