Cinema News
என் கூடலாம் நடிக்க மாட்டீங்களா?!.. ஏக்கமா கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!.. தனுஷ் சொன்னது இதுதான்!..
Aishwarya rajesh: அட்டக்கத்தி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை திரைப்படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து தான் எந்த மாதிரியான நடிகை என்பதை திரையுலகுக்கு காட்டினர்.
அதன்பின் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அவரை தவிர வேறு எந்த பெரிய ஹீரோவும் ஐஸ்வர்யா ராஜேஷை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்வரவில்லை. விஜய் சேதுபதியே பெரிய ஹீரோவான பின் அவரை தன்னுடன் நடிக்க வைப்பதில்லை.
இதையும் படிங்க: ’நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடல் இந்த நடிகருக்கு தான் இசையமைத்தேன்.. ஜிவி சொன்ன ஷாக் நியூஸ்..!
எனவே, சின்ன சின்ன நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் அதுவும் கடுப்பாகிவிட பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, தி கிரேட் இண்டியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு என பல படங்களிலும் அப்படியே நடித்தார்.
அதில் எந்த படமும் ஓடவில்லை. எனவே, பெரிய ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அதேநேரம் வெற்றி மாறன் இயக்கிய வட சென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மெட்ராஸ் பாசை பேசும் பெண்ணாக அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க: நடு இரவில் இளம்பெண்ணுடன் விஷால்.. கசிந்த வீடியோ..! என்னங்க நீங்களே இப்படியா? கலாய்க்கும் ரசிகர்கள்..!
அதுவும் சில காட்சிகளில் கெட்ட வார்த்தை பேசியும் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் வட சென்னை படத்தில் நடித்த பின் பலமுறை தனுஷிடம் ‘வட சென்னை தவிர வேறு எந்த படத்திலும் என்னை நடிக்க வில்லையே. நான் என்ன மோசமான நடிகையா?’ என கேட்டேன்.
அதற்கு தனுஷ் ‘கண்டிப்பாக இல்லை. உங்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை நான் மதிக்கிறேன். வட சென்னை படத்தில் அந்த கதாபாத்திரத்தில் உங்களை நடிக்க வைப்பதற்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்தேன்’ என சொன்னார். வெற்றிமாறன் வட சென்னை 2 எடுப்பார். அதில், நான் இருப்பேன் என நம்புகிறேன்’ என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருந்தார் .
இதையும் படிங்க: இந்த தலைப்பை வைக்கவே ஒரு guts வேணும்! பாலசந்தர் பாராட்டிய அந்தப் படம் எதுனு தெரியுமா?