எக்கச்சக்க அழகை காட்டி ஏங்க வைக்கும் மிர்னா!.. லைக்ஸ் சும்மா அள்ளுது!..

Published on: December 26, 2023
---Advertisement---

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. கேரளாவை சேர்ந்த இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்தது. துவக்கத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

mirna

நெடுநல்வாடை என்கிற படத்தில்தான் இவர் முதலில் நடித்தார். ஆனால், அந்த பட இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு அப்படத்திலிருந்து விலகினார். அப்பட இயக்குனர் தனக்கு தொல்லை கொடுத்ததாக கூறி தற்கொலை செய்யவும் முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

mirna

பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். அப்படியே கேரளா சென்று பிக் பிரதர் என்கிற படத்திலும் நடித்தார். இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் ஆந்திரா பக்கம் போய் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்தார்.mirna

அதேபோல், கலையரசனுடன் இணைந்து புர்கா என்கிற படத்திலும் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. அதோடு, நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார். இப்போது பர்த்மார்க் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

mirna

மேலும், ஆனந்தம் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, அவ்வப்போது சிக்கென்ற உடைகளில் அழகை நச்சென காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், மிர்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்து ஜொள்ளுவிட வைத்துள்ளது.

mirna

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.