அயலானில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அல்ல அந்த நடிகருக்கும் சம்பளம் இல்லயாம்.!

Published on: December 27, 2023
---Advertisement---

Ayalan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படமானது அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் சம்பளமே வாங்காமல் நடித்து இருக்கேன் எனச் சொல்லி இருந்தார். அவர் மட்டும் இல்ல இதில் ஒரு முன்னணி நடிகரும் சம்பளம் இல்லாமலே வேலை செய்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஏலியன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் ஒரு ஆர்வம் இருக்கும். அதை தான் கையில் எடுத்து இருக்கிறது அயலான் படக்குழு. சிவகார்த்திகேயன், ப்ரீத்தி சிந்தா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர். ரவிகுமார் இயக்கத்தில் கோட்டபடி ஜே.ராஜேஷ் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…

கிட்டத்தட்ட 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படம் அப்படி, இப்படி மாறி வரும் பொங்கல் தினத்தில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் சில கடன் பிரச்னைகள் இன்னமுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் நிகழ்ச்சியில் பேசும் போது, தெலுங்கு சினிமாவிற்கு பாகுபலி, கன்னட சினிமாவிற்கு கே.ஜி.எஃப் போல அயலான் தான் தமிழ் சினிமாவில் அடையாளமாக இருக்கும். இனி சிவாவிற்கு கடனே இருக்காது. அயலான் எல்லாத்தையும் மாற்றி விடும் என செம தெம்பாகவே பேசி இருந்தார்.

இதையும் படிங்க: மாட்டிக்க இருந்த மனோஜ்… செம பில்டப்பில் தப்பிச்சிட்டாரே..! ரசிகர்களை ஏமாத்துறீங்க டைரக்டரே..!

இப்படத்தின் ஏலியன் அயலானுக்கு டப்பிங் செய்து இருப்பது நடிகர் சித்தார்த் தானாம். அவரும் இப்படத்திற்காக எந்த ஒரு சம்பளுமும் வாங்கவே இல்லையாம். சிவா தனக்கு செய்ததுக்கு தானும் செய்கிறேன் எனக் கூறி நன்றிக்கடனுக்காக செய்ததாகவும் தன்னுடைய சகாக்களிடம் கிசுகிசுத்து வருவதாக கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.