Cinema History
சோ-விடம் சவால் விட்டு பெரிய நடிகராக மாறியவர்!. யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப் படுவீங்க!
நாடகங்களில் பல வருடங்கள் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்தான் சோ ராமசாமி. சோ-வை பொறுத்தவரை சிவாஜி உள்ளிட்ட சில நடிகர்களை போல மிகவும் சின்சியரான நடிகரெல்லாம் கிடையாது. மிகவும் ஜாலியாக நடிக்க வந்தவர் இவர். நாடகங்களில் கூட இயக்குனர்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார்.
இயக்குனர் ஒரு வசனம் சொன்னால் நடிக்கும்போது அதை மாற்றி வேறு பேசிவிடுவார். சோ நடித்த சில நாடகங்களை இயக்குனர் பாலச்சந்தரும் இயக்கியிருக்கிறார். ஆனால், சோ செய்த அட்ராசிட்டிகளாலேயே ‘நீங்களும் வேணாம் உங்க நாடகமும் வேணாம்’ என தெறித்து ஓடினார். இதை ஒரு மேடையில் சோ-வே சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு வாக்கு கொடுத்த ஜெய்சங்கர்!.. கடைசி வரை செய்ய முடியலையே!…
நாடகத்திற்கு பின் சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களிலும் சோ நடித்தார். பெரும்பாலும் பணக்கார வில்லனுக்கு லூசு மகன் போன்ற கதாபாத்திரத்தில்தான் அதிகம் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களையே காட்சிகளில் வாரிவிடுவார் சோ. எனவே சோ-வுடன் நடிக்கும்போது அவர்கள் இருவருமே ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
துவக்கத்தில் சோ-வுக்கு சினிமாவில் நடிக்க பெரிய ஆர்வம் இல்லை. சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிப்பது அவருக்கும் பிடிக்கவில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. எனவே, இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவில் இருந்தார். அப்போதுதான் வீணை பாலச்சந்தர் ஒரு மேடையில் சோ-வை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். இப்படி நடிக்க துவங்கிய சோ பல படங்களிலும் தொடர்ந்து நடிக்க வேண்டியதாயிற்று.
இதையும் படிங்க: மார்க்கெட் போகும் என முன்பே கணித்த ஜெய்சங்கர்!. அதற்காக அவர் செய்ததுதான் ஹைலைட்!…
இதுபற்றி ஒருமுறை பத்திரிக்கையில் எழுதிய சோ ‘நான் விருப்பமில்லாமல் சினிமாவுக்கு வந்தவன். ஆனால், திட்டமிட்டு சினிமாவுக்கு வந்த என் நண்பர் ஒருவரை பற்றி சொல்கிறேன். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பி.ஏ முடித்த அவனுக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால், அவனோ ‘சினிமாவில் நடிப்பதே என் லட்சியம். இந்த வேலை எனக்கு தற்காலிகமான ஒன்றுதான். விரைவில் இந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வருவேன்’ என சொல்லிவிட்டுதான் ரயிலே ஏறினான்.
இது நல்ல வேளை. இதையும் விட்டுவிட்டு, சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் வாழ்க்கை திண்டாட்டம் ஆகிவிடும் என அவனின் நண்பர்கள் பலரும் அறிவுரை சொன்னார்கள். நான் கொஞ்சம் அதிகமாகவே அவனுக்கு அறிவுரை சொன்னேன். ஆனால், டெல்லி சென்ற சில மாதங்களில் அந்த வேலையை விட்டு விட்டு வந்து ‘நான் கண்டிப்பாக நடிகனாக மாறுவேன்’ என என்னிடம் சவால் விட்டான்.
ஒருகட்டத்தில் அவனின் முயற்சியும் பலித்தது. முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க துவங்கி 100 படங்களுக்கும் மேல் நடித்தான். அவனின் பெயர் ஜெய்சங்கர்’ என எழுதியிருந்தார் சோ.
இதையும் படிங்க: மன்னாதி மன்னனுக்கே ஆறுதலா!.. புஷ்வானமாகி திரும்பி வந்த ஜெய்சங்கர்… அப்படி என்னதான் நடந்தது?