Connect with us
vijayakanth

Cinema News

கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

Vijayakanth: இன்று காலை எல்லோரின் காதுக்கும் பேரதிர்ச்சியாக வந்த செய்திதான் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் மரணம். 80களில் சினிமாவில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமக முன்னேறி முன்னணி இடத்திற்கு உயர்ந்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். ஒருகட்டத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாகவும் மாறினார்.

அதன்பின் அரசியல் கட்சியையும் துவங்கினார். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சிகிச்சை பெற்றார். ஒரு கட்டத்தில் நடக்க முடியாமலும், எழுந்து நிற்க முடியாமலும், பேச முடியாமலும் பாதிக்கப்பட்டார்.,

இதையும் படிங்க: விஜயகாந்த் படங்களுடன் மோதிய டாப் நடிகர்கள்!.. அட இவ்வளவு இருக்கா?!…

சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 வாரங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின் தேமுதிக செயலாளர் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போதே அவரின் உடல்நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகளும் வெளியானது. ஆனால், திடீரென அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்து தமிழக மக்களை அதிர்ச்சியாக்கியது.

அதன்பின் அவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரையுலகை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கு வருவதற்கு முன்பே விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை கொடுக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இன்று மாலை அவரின் உடல் தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீளாதுயரில் விட்டுச் சென்ற கேப்டன்! மரணச் செய்தி கேட்டு அலறும் மக்கள் – உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top