Connect with us
Vijayakanth

Cinema History

படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..

Vijayakanth: நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராக இருந்ததால்தான் எல்லோரும் விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறார்கள். பொதுவாக கிராமமோ, நகரமோ, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொழப்பை தேடி சென்னைக்கு வருபவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் நிஜ குணத்திலிருந்து மாறிவிடுவார்கள்.

அதாவது அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணம், உதவும் குணம், மனிதாபிமானம் எல்லாமே மரித்துபோய்விடும். சென்னை போன்ற நகரங்கள் பலரையும் அப்படி மாற்றிவிடும். அதுவும், திரையுலகில் இருக்கும் ஒருவர் மொத்தமாக மாறிப்போய்விடுவார். ஏனெனில், சினிமா உலகில் அவர் அவ்வளவு ஏமாற்றங்களையும், அவமானங்களையும், போட்டி பொறாமைகளையும் பார்த்திருப்பார். எனவே, தனது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக பலருமே அப்படி மாறிவிடுவார்கள்.

இதையும் படிங்க: நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!

எனவே, அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் போய் ஒரு கட்டத்தில் மோசமான மனிதர்களாகவே அவர்கள் மாறிவிடுவார்கள். ஆனால், இதில், விஜயகாந்த் மட்டுமே விதிவிலக்கு. கிராமத்தில் இருந்து சென்னை போன்ற நகரத்திற்கு வந்து வாழ்ந்த விஜயகாந்த் கடைசிவரை ஒரு கிராமத்து மனிதருக்குரிய அந்த அன்பு, மனிதாபிமானம், வெள்ளந்தி தனம் என எல்லாவற்றையும் கடைசிவரை தனக்குள் அப்படியே வைத்திருந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

அதனால்தான் எப்போதும் எல்லோராலும் போற்றப்படும் ஒரு மனிதராக விஜயகாந்த் இருக்கிறார். இதற்கு ஒரு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். விஜயகாந்த் கஜேந்திரா எனும் படத்தில் நடித்துகொண்டிருந்தார். அப்போது அப்படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கும் அப்படத்தில் பணிபுரிந்த பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. உதவி இயக்குனர்களை பார்த்து ‘நீங்களாம் சோறு தின்ன மட்டும்தான இங்க வறீங்க’ என வி.ஏ.துரை சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: விஜி என்ன விட்டு போயிட்டியாடா..?நடக்க முடியாமல் அழுது கொண்டே வந்த நடிகர் தியாகு…

இதனால் ஏற்பட்ட மனக்காயத்தால் உதவி இயக்குனர்கள் இனிமேல் படப்பிடிப்பில் நாங்கள் சாப்பிடமாட்டோம் என சொல்லிவிட்டனர். இது எதுவும் விஜயகாந்துக்கு தெரியாது. ஒருநாள், மதிய உணவு இடைவெளியில் அவர்கள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்த விஜயகாந்த் இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது தயாரிப்பாளர் நடந்துகொண்ட விதம் பற்றி அவர்கள் சொல்லிவிட்டனர்.

Vijayakanth

Vijayakanth

இதில் கோபமும், அதிர்ச்சியும் அடைந்த விஜயகாந்த் ‘உங்களை சொன்னால் அதையும் என்னையும் சொன்ன மாதிரிதான். இனிமேல் நானும் இங்கு சாப்பிட மாட்டேன்’ என சொல்லிவிட்டார். இதைக்கேள்விப்பட்டு பதறியடித்துக்கொண்டு தயாரிப்பாளர் ஓடி வந்தார். அவரிடம் விஜயகாந்த் ‘இனிமேல் நான் சாப்பிடமாட்டேன்’ என கறாராக சொல்லிவிட்டார். அதன்பின் ஒரு மாத காலம் அப்படம் தொடர்பான வேலைகள் நடந்தபோது விஜயகாந்துக்கும், அந்த உதவி இயக்குனர்களுக்கும் சாப்பாடு விஜயகாந்தின் வீட்டில் இருந்து வந்தது.

இப்படி ஒரு மனிதரை திரையுலகில் பார்ப்பது இனிமேல் நடக்குமா என்பது தெரியவில்லை.

google news
Continue Reading

More in Cinema History

To Top