‘ரமணா’ படத்துல இத மறைச்சுதான் கேப்டனிடம் கதை சொன்னேன்!.. முருகதாஸ் பகிர்ந்த தகவல்

Published on: December 28, 2023
ramaana
---Advertisement---

Ramana Movie: தமிழ் சினிமா ஒரே போக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை அரசியல் பின்னணியில் காட்டிய படமாக ரமணா படம் அமைந்தது. ஒரு படத்தை எடுக்க முன்வரும் எந்த இயக்குனரும் அந்தப் படம் வெற்றியடைய வேண்டும்.

அதே சமயம் மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அப்படி இரண்டையும் ஒரே படத்தில் காட்டிய படமாக ரமணா படம் அமைந்தது. அந்த வகையில் இரண்டையும் திறம்பட செய்து காட்டியவர் அந்தப் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ்.

இதையும் படிங்க: கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிச்சதால கேப்டன் பேர் வரல! உண்மையான காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க

ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரமணா இரண்டாவது படம்தான். அவருக்கு இருந்த ஒரே சவால் ஒரு பெரும் ஆளுமையாக இருந்த விஜயகாந்தை எப்படி வேலை வாங்குவது என்பதுதான். ஆனால் அந்த பாரத்தை முற்றிலும் குறைத்தாராம் விஜயகாந்த்.

அவரே முன்வந்து ஏ.ஆர். முருகதாஸிடம் பேசிக் கொண்டே இருப்பாராம். அதனால் விஜயகாந்துக்கும் முருகதாஸுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையை விஜயகாந்திடம் சொல்லும் போது விஜயகாந்துக்கு இரண்டு கண்டீசன்கள் இருந்ததாம்.

இதையும் படிங்க: கேப்டனை பாராட்டிய ஜாக்கிசான்.!.. காரணம் இதுதான்!.. உருகும் ஸ்டண்ட் இயக்குனர்…

குழந்தைகளுக்கு அப்பாவாக நான் இருக்கக் கூடாது  மற்றும் படத்தின் க்ளைமாக்ஸில் நான் சாகக் கூடாது என்ற கண்டீசனை கூறியிருக்கிறார், எப்படியாவது இந்தப் படத்தை விஜயகாந்தை வைத்து எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முருகதாஸ் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லி நடிக்க வைத்திருக்கிறார்.

ஆனால் போக போக முருகதாஸின் அந்த அர்ப்பணிப்பு விஜயகாந்துக்கு மிகவும் பிடித்துப் போக அந்தப் படத்தின் கதையை பற்றியும் விஜயகாந்த் கவலைப்படவில்லையாம். அதனால் குழந்தைகளுக்கு அப்பா மற்றும் க்ளைமாக்ஸில் அவர் இறப்பது என ஒன்றுமே சொல்லாமல் நடித்துக் கொடுத்தாராம் விஜயகாந்த்.

இதையும் படிங்க: இப்போ விஜயகாந்த்..? கமல் தப்பினார்.. அடுத்த குறி உங்களுக்கா..? உதயநிதியிடம் பகீர் கிளப்பும் பிரபல இயக்குனர்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.