Cinema History
வடிவேலு விஜயகாந்தைத் திட்டியது ஏன்னு தெரியுமா? பயில்வான் போட்டு உடைத்த ரகசியம்
வடிவேலு விஜயகாந்துடன் நடித்த சின்னக்கவுண்டர் படம் தான் அவரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. படத்தில் வடிவேலு சின்னக்கவுண்டராக வரும் விஜயகாந்துக்குப் படம் முழுவதும் குடைபிடித்தபடி வருவார். ஒரு ஹீரோவின் கூடவே ஒரு காமெடியன் வரும்போது ரசிகர்கள் அவரையும் கவனிக்கவே செய்வார்கள். யார் இந்த காமெடியன் என்று. அதுதான் வடிவேலுவை வளர்ச்சி அடையச் செய்தது.
சின்னக்கவுண்டர் படத்துல வடிவேலு தான் விஜயகாந்துக்கு படம் முழுவதும் குடைபிடிப்பார். ஆனால் இயக்குனரே ஒரு சில காட்சிகளில் வந்தால் போதும் என்று தான் சொன்னாராம். ஆனால் விஜயகாந்த் தான் வடிவேலு நம்ம ஊருக்காரன்னு படம் முழுவதும் வரச் செய்தாராம். இதுகுறித்து பிரபல யூடியூபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
இதையும் படிங்க… கேப்டனா நீ? விஜயகாந்தை மோசமாக விமர்சித்த வடிவேலு.. அவர் மக்கள் பலம் இப்ப தெரிஞ்சி இருக்குமே… நீங்க பேசலாமா?
கேப்டன் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது கார் பார்க்கிங்கில் சின்ன பிரச்சனை. அப்போது அங்கு குழப்பம் நிலவியது. அதற்கு வடிவேலு தான் காரணம். விஜயகாந்த் வடிவேலுவைப் பற்றி எந்த சூழ்நிலையிலும் பேசவே இல்லை. வடிவேலு விஜயகாந்தைப் பற்றித் தவறாகப் பேசியதற்குப் பிறகு சொன்னது தப்பு தான் என்று மனம் வருந்தினாராம்.
காலாகாலத்துக்கும் கேப்டனை வடிவேலு இதயத்தில் சுமக்கணும். சின்னக்கவுண்டர் படத்துல வடிவேலு கேரக்டரை படம் முழுக்கக் கொண்டு வரச் செய்தவர் கேப்டன் தான். என்னை சினிமாவில் நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர், கமலும், கேப்டனும் தான் என்று கூட வடிவேலு ஒரு பேட்டியில் சொன்னாராம்.
இதையும் படிங்க… விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் வடிவேலு!. அவ்வளவு மோசமானவரா வைகைப்புயல்!..
அரசியல் காரணமும் வடிவேலுவைக் கோபப்படச் செய்ததாம். அவரது கோபத்தின் உச்சம் சிந்திக்கும் திறனைக் குறைத்து விட்டதாம். அதனால் தான் கேப்டனைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இந்தப் பிரச்சனையால் தான் வடிவேலு இதுவரைக்கும் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை என்றே தெரிகிறது. மதுவுக்கு அடிமையாகாமல் இருந்து இருக்கலாம். அது தான் என்னோட வருத்தம்.
மேற்கண்ட தகவலை நடிகரும், பிரபல யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.