அதிசயம்… இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் கேப்டன்… எப்படின்னு தெரியுமா?

Published on: December 29, 2023
VK1435
---Advertisement---

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்து பங்கேற்றுள்ளனர். சமூகவலை தளங்களும், தொலைக்காட்சி சானல்களும் கேப்டனின் இறுதி அஞ்சலி ஊர்வலத்தைத் தான் ஒளிபரப்பி வருகின்றன.

இதையும் படிங்க… வடிவேலு விஜயகாந்தைத் திட்டியது ஏன்னு தெரியுமா? பயில்வான் போட்டு உடைத்த ரகசியம்

அரசுமரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் சினிமா இயக்குனர்களும், நடிகர்களும் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் பிரவீன்காந்த் கேப்டன் விஜயகாந்தைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்தும் நம்முடனே தான் பயணித்து வருகிறார். அவரது உடலுக்கான இறுதி மரியாதையை ஒரு 300 அடி தூரத்திற்குள் தான் அவரது ஆன்மாவாக இருந்து கொண்டு ஒரு கழுகுப் பார்வையைப் பார்த்து வருகிறார்.

நமக்கு இவ்வளவு கூட்டமா? இனி கவலை வேண்டாம். இந்த கூட்டம் நம் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும். தமிழ்நாட்டைப் பார்த்துக் கொள்ளும். தமிழைப் பார்த்துக் கொள்ளும் என்று சந்தோஷப்படுவார்.

இதையும் படிங்க… மனைவியே எனக்கு கண் கண்ட தெய்வம்.. பிரேமலதா குறித்து விஜயகாந்த் சொன்ன காதல் வார்த்தை..!

உண்மையான வாரிசு அரசியல் என்பது எதிர்காலத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டும் தான் உண்டு. இவரது வாரிசுகள் சினிமாவிலோ, அரசியலிலோ, சமுதாயத் தொண்டிலோ ஈடுபட்டு திறம்பட பணிகள் ஆற்றி வந்தால் அது நிச்சயம் நடக்கும். இயக்குனர் பிரவீன்காந்த் ரட்சகன், ஜோடி, ஸ்டார், புலிப்பார்வை என பல படங்களை இயக்கியுள்ளார்.

ரமேஷ் கண்ணா சொல்லும் போது விஜயகாந்த் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். இது தப்புன்னா தப்பு. கரெக்ட்னா கரெக்ட்னு தைரியமாக சொல்லி விடுவார். அதே போல எந்தநிலையிலும் அவர் தனது சுயநலத்தையும் பார்க்கவே மாட்டார் என்றார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.