Cinema News
சிவாஜி இறப்பில் நடிகர் சங்கம் செய்த விஷயம்..! விஜயகாந்த் இறப்பில் ஒரு ஈ, காக்காவை காணுமே..!
Nadigar Sangam: தமிழ் சினிமா சங்கத்தின் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவர் செய்ததை தற்போதைய சங்கத்தினர் மிஸ் செய்து விட்டதாக ஒரு கண்டன குரலே இணையத்தில் அதிகமாகி எழும்பி வருகிறது. பழசை பார்க்கும் போது விஜயகாந்த் தான் உண்மையான தலைவர் என ரசிகர்களும் புகழ்பாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவுக்கென்ற குழுவை சங்கமாக மாற்றியவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். ஆனால் ஒரு வருடம் மட்டுமே கட்சியின் தலைவராக இருந்தார். இதை தொடர்ந்து அவர் முதல்வர் ஆனவுடன் சங்கத்துக்கு ஒரு கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தார். அதன் பின்னர் சிவாஜி கணேசன் 1971ல் இருந்து 1985 வரை நடிகர் சங்க தலைவராக இருந்தார்.
இதையும் படிங்க… காலையில் ஒரு படம்… மாலையில் இன்னொன்னு… தூங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்..! 56 நாட்களில் ரிலீஸ்..!
இதை தொடர்ந்து 1985ல் இருந்து ராதாரவி தலைவர் ஆனார். ஆனால் அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வர 2000ம் ஆண்டு எதிர்க்க ஆள் இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் வென்றவர் விஜயகாந்த். அதுவரை நடிகர் சங்கம் மிகப்பெரிய கடனில் இருந்தது. நிறைய கலை நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடனில் இருந்து மீட்டார்.
அதுமட்டுமில்லை, நடிகர்கள் இறந்துவிட்டால் நடிகர் சங்கத்தில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் அங்கு இருப்பார்கள். சிவாஜி இறப்பில் சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் என அப்போதைய உச்ச நட்சத்திரங்கள் இறுதி சடங்கு வரை உடன் இருந்தனர். அதை சரியாக வழிநடத்தி கொடுத்தவர் விஜயகாந்த்.
இதையும் படிங்க… விஜயகாந்த் உடன் 57 முறை நேரடியாக மோதிய சத்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு புரட்சி கலைஞரா… புரட்சித்தமிழனா?
தன்னை நடிகர் என்பதை மறந்து கூட்டத்தை கலைத்து அவர் செய்தது எல்லாம் மறக்க முடியாதவை. ஆனால் நேற்று அவர் இறப்பில் கூட்டம் அலைமோதினாலும் கூட இருந்தது காவல்துறை தரப்பு தான். தற்போதைய பொறுப்பில் இருக்கும் தலைவர் நாசர் மட்டும் நண்பராக வந்து பார்த்து விட்டு சென்றார். விஷால், கார்த்தி அந்த பொறுப்பை ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷால் தன் அஞ்சலியை வீடியோவையை வெளியிட்டு தெரிவித்தார்.
கார்த்தி பெரிய நீண்ட இரங்கல் செய்தி கொடுத்து இருந்தார். அதிலும் கடைசியில் தன்னை நடிகர் சங்க பொருளாளர் எனவும் குறிப்பிட்டு இருந்தார். பெயரில் மட்டும் இல்லை இறங்கி வேலை செய்யணும் பாஸ் என ரசிகர்கள் தற்போது பழைய போட்டோவை வைத்து ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் விஷால் அணியை சேர்ந்த கருணாஸ் பாதுகாப்பு இல்லாம இருக்குனு துக்க வீட்டில் குறைவேறு சொல்லி சென்றார்.
ஆனால் பல நடிகர்கள் அந்த கூட்டத்தை பொறுப்படுத்தாமல் ஏறிக் குதித்து வந்து பார்த்த சம்பவமும் நடந்தது. விஜய் ரொம்ப நேரம் காத்திருந்து கூட்டம் குறைய வந்து கண்ணீர் மல்க பார்த்துவிட்டு சென்றார். ஆனால் நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முன்னாள் தலைவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.