தான தருமங்கள் செய்த கேப்டனுக்கு கடைசி காலத்தில் இவ்ளோ கஷ்டங்களும் வந்தது ஏன்னு தெரியுமா?

Published on: December 30, 2023
VK33
---Advertisement---

இவ்ளோ புண்ணியம் செய்த விஜயகாந்த் ஏன் கடைசி கட்ட காலத்துல இவ்ளோ கஷ்டப்பட்டு இறந்தார்னு பலருக்கும் ஒரு கேள்வி வந்தவண்ணம் உள்ளது. விஜயகாந்த் எவ்வளவோ தான தா்மங்கள் எல்லாம் செய்து இருக்கிறார். அவரால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

ஆனாலும் அவரது இறுதிகாலம் ஏன் மருத்துவமனை என்று நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே கழிந்தது? நல்ல ஆன்மா என்றால் அது வலியில்லாமல் முக்தி அடைந்து இருக்கலாமே என்று பலரும் கேட்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் பதில் சொல்லி இருக்கிறார். என்னவென்று பார்க்கலாமா…

இதையும் படிங்க… wife சண்டையே பாதி டென்ஷன்! விஜயகாந்த் குறித்து மேனேஜர் சொன்ன பகீர் தகவல்

மனிதனாகப் பிறந்தால் ஒவ்வொருத்தரும் இறந்து தான் ஆகணும். அதுல எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல் ஆவர்னு சொல்வாங்க. அதுதான் இயற்கை. அந்த வகையில் மார்கழியில் இறந்தால் சொர்க்கம்னு சொல்வாங்க. விஜயகாந்த் தெய்வீகத் தன்மையோடு தான் இறந்துருக்காரு.

வாழும்போது செய்த புண்ணியம் தான் நம்மை வழிநடத்தும். அதையும் தாண்டி இவருக்கு பூர்வ புண்ணியமும் நிறைய இருக்கு. இரண்டும் சேர்ந்ததால தான் ஒரு அற்புதமான நாள்ல அவரு இறந்துருக்காரு. அவர் செய்த பலனுக்கு கடவுள் நல்ல இறப்பைத் தான் கொடுத்துருக்காரு. இது மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும், எங்களோட பார்வையில் இந்த நியாயம் தெரியும்.

இவர் செய்த புண்ணியம் தான் அந்த நாளில் இவருக்கு இறப்பைக் கொடுத்துள்ளது. நாம் செய்யும் செயல்களுக்கான வினை தான் செய்யும் வினை. இது நல்லது. இது கெட்டதுன்னு நமக்குத் தெரியும் அல்லவா. அதனால் அதற்குரிய விளைவுகளை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இவர் ஏற்கனவே பூர்வ புண்ணியம் கொண்டவராக இருந்தால் தான் நல்ல தலைவராக உருவெடுத்துள்ளார். இந்த ஜென்மத்தில் அவர் செய்த விஷயம் தான் அவரை நோய்வாய்ப்பட்டவராக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க… வடிவேலு எல்லாம் ஒரு மனுஷனா… மதுரைக்காரனோட மானத்த வாங்காதப்பா… பயில்வான் பொளேர்..!

அதிலும் நீண்ட நாள் இப்படியே இருக்காரு. இதுதான் இறைவனோட விளையாட்டு. ஏன்னா அவருக்கான பாதையை, ஒரு நேரத்தை இறைவன் பிடிச்சி வச்சிட்டான். அதுவும் நல்ல நாள்ல நேரடியா எங்கிட்ட வரணும்கறதால தான் கர்மாவைக் கழிச்சிட்டு பரிசுத்த ஆன்மாவா வரவழைச்சிட்டான். அதுவும் அந்த மார்கழி மாதத்தில புனர்பூசம் நட்சத்திரத்துல குருபகவான் நாளில் இறைவன் தன்னோட இடத்துக்கு வந்து கூப்பிடுறாரு. இவரோட இறப்பு இப்ப உள்ள மக்களுக்கான படிப்பினை.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.