ஃபர்ஸ்ட் படமே அப்படி யாராலும் பண்ண முடியாது! தனுஷ் படத்தை பற்றி சிவகார்த்திகேயனா இப்படி சொன்னது?

Published on: January 1, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர். இன்றைய முன்னணி நடிகர்கள் பலபேரை மேடையில் ஆங்கராக இருந்து பங்கம் செய்தவர் சிவகார்த்திகேயன்.

ஆனால் இன்று அவர்களுக்கே ஒரு டஃப் கொடுக்கும் நடிகராக உயர்ந்து நிற்கின்றார். நடிகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக என பன்முகத்திறமைகள் கொண்ட கலைஞராக உருவெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க:  மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

இவரின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து  தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அமைந்ததால் விஜய்க்கு எப்படி குடும்ப ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல் சிவகார்த்திகேயன் படத்தையும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே அமைகின்றன.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வரவிருக்கிறது. அந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில்தான் சிவகார்த்திகேயன் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில்தான் அயலான் பட இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

சமீபகாலமாக சிவகார்த்திகேயனை பற்றி இசையமைப்பாளர் இமான் கூறிய சில விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அது எதுவும் தனக்கு சம்பந்தமில்லாதது என்பது போலத்தான் சிவகார்த்திகேயன் அயலான் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் வெற்றிமாறன் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் பொல்லாதவன் என்று தனுஷ் நடித்த படத்தை கூறினார். இது கேள்வி கேட்ட தொகுப்பாளரை ஆச்சரியப்பட வைத்தது.

இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

ஏனெனில் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஓடிக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படி சொன்னது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் பொல்லாதவன் படம் பக்கா கமெர்ஷியல் படமாகவும் படமுழுக்க தெரிந்தது. முதல் படத்திலேயே இவ்வளவு பிரஸ்ஸரை கொடுக்க முடியுமா ? அப்படியே கொடுத்தாலும் அதை எப்படி கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார் வெற்றிமாறன் என்றுதான் தோன்றுகிறது என சிவகார்த்திகேயன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.