Connect with us

Cinema History

விசித்ரா சொல்ற மாதிரிலாம் இல்ல!.. பாலகிருஷ்ணா எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா? பகீர் கொடுத்த பிரபலம்..!

Vichithra: தமிழ் பிக்பாஸில் 40 வயதை தாண்டிய பலரும் ஒன்று அல்லது மூன்று வாரங்களில் வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்த சீசனில் இருக்கும் விசித்ரா கிட்டத்தட்ட பைனல் மேடை ஏறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்களும் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் பிக்பாஸ் சீசன் 7 முடியும் தருவாயில் இருப்பதால் பைனலுக்கு ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். அதிலும், இந்த சீசனில் கண்டிப்பாக பெண் போட்டியாளர் தான் பட்டத்தை அடித்து செல்வார் என ஆணித்தரமாக நம்பப்படுகிறது. அதிலும் அர்ச்சனா மற்றும் விசித்ரா தான் கமலுடன் மேடை ஏறுவார்கள் எனவும் பேச்சுகள் அடிப்படுகிறது.

இதையும் படிங்க: பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

முதல் சில வாரத்திலேயே வெளியேறுவார் என நினைக்கப்பட்டவர் தான் விசித்ரா. இருந்தும், அவர் சொன்ன மறக்க முடியாத கதையால் அவரின் பிக்பாஸ் கேரியரே உச்சம் அடைந்தது. அதில், நான் நடித்த ஒரு திரைப்படத்தின் பிரபல தெலுங்கு நடிகர் ரூமுக்கு வரச் சொன்னார். அவரின் ஆட்கள் தினம் என் ரூமை தட்டுவார்கள். பெரிய மன உளைச்சல் வந்தது.

அந்த படத்தின் சண்டை மாஸ்டர் என்னை அறைந்தார். அதனால் தான் சினிமாவில் இருந்து வெளியேறினேன் எனவும் குறிப்பிட்டார். இது பரபரப்பானது. அந்த நடிகர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்பதை ரசிகர்கள் கண்டுப்பிடித்தனர். தொடர்ந்து அதை வைரலும் செய்தனர். தற்போது விசித்ராவின் இந்த கருத்துக்கு டிஸ்கோ சாந்தி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடு தான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா… அப்போ இத படிங்க.. சிலிர்க்கும்..!

நடிகை

நடிகை

ஒரு படத்தில் நடித்திருக்கேன். அப்போ எனக்கு ஒதுக்கப்பட்ட காரில் இடம் இல்லை. அப்போ 5 நாட்கள் என்னையும், என் உதவியாளர்களையும் அவரே அழைத்துக்கிட்டு போய் கூட்டிக்கிட்டு வருவார். அவர் அத்தனை நல்ல மனிதர். ரொம்பவும் நல்லவர். அவரை யாரும் தப்பாக சொல்லி விட்டால் என்னால் ஒதுக்கவே முடியாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளி வந்தால் தான் உண்மை தெரியும் என்கின்றனர் ரசிகர்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top