Connect with us
ravi

Cinema News

சம்பளம் மட்டும் போதும்! கதை தேவையில்ல – அடுத்த படத்திற்கும் ஆப்பு வைக்க தயாராகும் ஜெயம் ரவி

Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம்ரவி. கிட்டத்தட்ட 20 வருடங்களாக கோலோச்சி வரும் ஜெயம் ரவி இன்னும் அந்த 100 கோடி க்ளப்பில் இணையவில்லை என்பதுதான் ஆச்சரியம். மக்களின் ஆதரவை பெற்றாலும் அவர் நடித்து வெளியாகும் படங்கள் ஓரளவு வரவேற்பை தான் பெறுகின்றன.

2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்கத்தில் வெளியான படம்தான் ஜெயம். அந்தப் படத்தில் கதாநாயகனாக  நடித்து தன் முதல் அறிமுகத்தை பதிவு செய்தார் ஜெயம் ரவி. அதிலிருந்துதான் அவருடைய பெயரில் ஜெயம் என சேர்ந்து ஜெயம் ரவி என்றானது.

இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

மற்ற நடிகர்களை போல் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஜெயம் ரவிக்கு இல்லை. ஏனெனில் அவரது அப்பா ஒரு எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் , அண்ணன் ஒரு இயக்குனர் என மிகவும் ஈஸியாக சினிமாவில் கால்பதித்தார் ஜெயம் ரவி.

முதல் படமே மாபெரும் ஹிட் என்றால் அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த மாதிரி ஒரு வெற்றி ஒரு சில பேருக்குத்தான் அமையும். அது ஜெயம் ரவிக்கும் அமைந்தது. அதனாலேயே அவரால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தது.

இதையும் படிங்க: க்யூட்னஸ் சும்மா அள்ளுது!.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை தவிற அவர் ஹீரோவாக சோலோவாக நடித்த பெரும்பாலான படங்கள் பெரும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் ஜெயம் ரவியும்  நித்யா மேனனும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

காதலிக்க நேரமில்லை என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை கிருத்திகா உதயநிதிதான் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்காக ஜெயம் ரவிக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரமா என்றால் அதுதான் இல்லை. ஜெயம் ரவியை விட நித்யா மேனனுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாம்.

இதையும் படிங்க: விஷாலின் மன உளைச்சலை போக்குமா ‘இந்தியன் 2’ படம்? எப்படியெல்லாம் கணக்குப் போடுறாரு புரட்சித்தளபதி?

ஆனாலும் இது தெரிந்தும் ஜெயம் ரவி எப்படி இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. அதற்கு பின்னால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top