கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

Published on: January 2, 2024
kalaignar
---Advertisement---

kalaignar 100: பொதுவாக ஆளும் கட்சியை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது சில விழாக்களை தமிழ் சினிமா உலகினர் நடத்துவார்கள். எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதற்கு ஆதரவாக செயல்படுவதுபோல் காட்டிக்கொண்டால் அரசிமிடருந்து திரைத்துறைக்கு நன்மை கிடைக்கும் என்கிற பொதுநலமும் அதற்கு காரணம் என்பதால் அதை வரவேற்கலாம்.

இதற்கு முன் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என நடத்தினார்கள். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் அவரை பாராட்டி விழா எடுத்தார்கள். இது அவ்வப்போது நடக்கும். இந்த விழாவில் ரஜினி, கமல் முதல் பல நடிகர்களும் கலந்து கொள்வார்கள். கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நெருக்கடியும் நடிகர்களுக்கு இருக்கும்.

இதையும் படிங்க: விஷாலின் மன உளைச்சலை போக்குமா ‘இந்தியன் 2’ படம்? எப்படியெல்லாம் கணக்குப் போடுறாரு புரட்சித்தளபதி?

இதுபோன்ற ஒரு விழாவில்தான் கலைஞர் முன்னிலையிலேயே கட்டாயப்படுத்தி விழாவுக்கு வரவைக்கிறார்கள் என ஓப்பான பேசி அதிரவைத்தார் அஜித். அதேபோல், இதுபோன்ற விழாக்களில் நடிகர், நடிகைகள் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்துவார்கள். நாடகம், நடனம், காமெடி நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறும்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே இதற்காக நடிகர், நடிகைகள் ஒத்திகை பார்ப்பார்கள். இந்தமுறை திமுக ஆட்சியில் இருப்பதால் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என இயக்குனர் சங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற 6ம் தேதி மாலை 6 மணிக்கு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆனால், நடிகர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஆதிக் படத்தில் ராசி நம்பரில் சம்பளம் வாங்கிய அஜித்.. இதுலைலாம் தெளிவா தான் இருக்கீங்க!..

ரஜினி, கமல் இருவரும் வாக்குறுதி கொடுத்தாலும் அஜித், விஜய் ஆகியோரின் கதை தெரியவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத அஜித் இதில் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த நிகழ்ச்சியில் நடனமாட ஒப்புக்கொண்ட கார்த்திக் கவுதம், அதர்வா போன்ற சில நடிகர்கள் ‘சாரி எனக்கு ஷூட்டிங் இருக்கு’ என சொல்லி மழுப்பி வருகிறார்களாம்.

ஒருபக்கம், புதுவருடத்தை கொண்டாட வெளிநாடுகளுக்கு சென்ற சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு, கார்த்தி போன்ற பல நடிகர்கள் எப்போதும் சென்னை திரும்புவார்கள் என்றே தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்குமா என இயக்குனர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முழிபிதுங்கி வருகிறது.

இதையும் படிங்க: உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.