விஜயகாந்தின் பட வாய்ப்பை தட்டி பறிக்க நினைத்த நடிகர்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

Published on: January 2, 2024
---Advertisement---

Vijayakanth: பொதுவாக எல்லா துறைகளிலும் போட்டி, பொறமைகள் இருந்தாலும் திரையுலகில் அது மிகவும் அதிகம். சினிமா பின்னணி இல்லாமல் வரும் நடிகர்களை வளரவே விடமாட்டார்கள். எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட முடியுமோ போடுவார்கள். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அது எல்லாவற்றையும் செய்வார்கள்.

ஏனெனில், பிரபலமான சினிமா நடிகர் எனில் பணம், புகழ் என இரண்டும் கிடைக்கும். அதற்காகத்தான் சினிமாத்துறையில் நீடிக்க பலரும் போராடி வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்து சில படங்களில் நடித்தாலும் நல்ல மனிதர்களின் ஆதரவு இல்லாமல் சினிமாவில் வளர முடியாது. அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்களெல்லாம் இப்படி மற்றவர்களால் வளர்ந்தவர்கள்தான்.

இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

விஜயகாந்த் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தபோது அவர் சந்திக்காத அவமானம் இல்லை. பலவகைகளிலும் அவரை அசிங்கப்படுத்தினார்கள். குறிப்பாக நிறத்தை காட்டியே பலரும் இழிவு படுத்தினர். ஒரு சில படங்களில் நடித்த பின்னரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

vijayakanth

விஜயகாந்தை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து ஒரிரு நாள் மட்டும் நடிக்க வைத்துவிட்டு ‘அவருக்கு நடிப்பு வரவில்லை’ என சொல்லி படத்திலிருந்து அவரை தூக்கினார்கள். சரிதா போன்ற சில நடிகைகளிடம் சென்று ‘உங்களுடன் நடிக்கமாட்டேன் என விஜயகாந்த் சொல்லி விட்டார்’ என சொல்லிவிட்டனர். எனவே, அவர்களும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தனர். இந்த சதியெல்லாம் பின்னர்தான் விஜயகாந்துக்கே தெரியவந்தது.

இதையும் படிங்க: பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த பட வேலைகள் துவங்கியதும் ஒரு தலை ராகம் படத்தில் நடித்த நடிகர் ‘இந்த படத்தில் நான்தான் நடிப்பேன்’ என சொல்லியிருகிறார். ஆனால், ஒரு தமிழன்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சொல்லிவிட விஜயகாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை விஜயகாந்தே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

இப்படி பல தடைகளை தாண்டித்தான் விஜயகாந்த் சினிமாவில் முன்னேறி வந்தார். அவர் பெரிய ஹீரோ ஆனபின் பல தயாரிப்பாளர்களும் அவரை தேடி வந்தனர். அவருடன் நடிக்க மாட்டேன் என சொன்ன நடிகைகளும் அவருடன் நடிக்க ஆசைப்பட்டனர் என்பதுதான் சினிமா வரலாறு.

இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.