அஜித்துக்கு ஜோடியான கமல் பட நடிகை!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சே!..

Published on: January 3, 2024
ajith
---Advertisement---

Ajith kumar: அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித். அதன்பின் பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாகவே நடித்தார். ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டியில் பயணிக்க துவங்கினார். பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவும் மாற்றியது.

ரசிகர் மன்றங்களையே கலைத்த ஒரே நடிகர் இவர்தான். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்களே தவிர குறையவில்லை. தொடர்ந்து மாஸ் காட்சிகள் அதிகமிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். வீரம், வேதாளம், விஸ்வாசம் என இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!..

விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தையும் துணிந்து இறக்கியவர் அஜித். தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூலை பெற்றதாகவும் சொல்லப்பட்டது. தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

citizen

அஜித் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான திரைப்படம்தான் சிட்டிசன். இப்படத்தை சரவண சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் வந்தார். இப்படத்தின் பற்றிய செய்திகள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் சமீரா ரெட்டிதானாம். ஆனால், அவருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்துள்ளது. இதனால், இயக்குனரால் அவருக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடம் சரியாக சொல்லமுடியவில்லையாம். எனவே, ஹேராம் படத்தில் கமலுடன் நடித்த வசுந்தரா தாஸை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஒரு பாடகிதான். நடிகை இல்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு நடனமெல்லாம் ஆடி இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவரை பார்த்தவுடன் அஜித்தின் நிறத்திற்கு வசுந்தரா மிகவும் பொருத்தமாக இருப்பார் என இயக்குனரும் நினைத்திருக்கிறார். ஆனால், சிட்டிசன் படத்திற்கு பின் வசுந்தரதாஸ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த படத்திலிருந்து வெளியேறிய சமீரா ரெட்டி 7 வருங்கள் கழித்து கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.