Cinema News
விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…
Vijayakanth: சினிமா நடிகர்களுக்கு பட்டங்களை பெரும்பாலும் தயாரிப்பாளரே கொடுப்பார்கள். அப்படி ஐஸ் வைத்தால் தொடர்ந்து அவர் தனக்கு கால்ஷீட் கொடுப்பார் என்பதுதான் அதன் சூட்சமம். அப்படி கொடுக்கப்படும் பட்டங்களும் பெரும்பாலும் நிலைப்பதில்லை. யாருக்கு கொடுக்கப்படும் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.
எம்.ஜி.ஆர் தனது படங்களில் புரட்சிகரமான காட்சிகளை வைத்தார். தனது பாடல்களில் புரட்சிகரமான பாடல் வரிகளை வைத்தார். அதோடு, திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாகவும் அவர் இருந்தார். அதோடு, தனிக்கட்சி துவங்கி அரசியல் தலைவராகவும் மாறினார். அதனால் அவருக்கு புரட்சித் தலைவர் பட்டம் கிடைத்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..
அதேபோல் நடிப்பில் நவரசங்களையும் காட்டியவர்தான் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. அதனால்தான் இவருக்கு நடிகர் திலகம் பட்டம் கிடைத்தது. ஆனாலு, இவரின் பெயருக்கு முன்பே சேர்க்கப்பட்ட சிவாஜி என்கிற பட்டம் இவரின் பெயராகவே மாறிவிட்டது.
அதேபோல், ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. ரஜினிக்கு ஐஸ் வைப்பதற்காக கொடுக்கப்பட்ட இந்த பட்டம் இப்போதுவரை நீடிக்கிறது. இந்த பட்டம் யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தும் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனாலும், அந்த பட்டத்தை யாருக்கும் விட்டுகொடுக்காமல் இருக்கிறார் ரஜினி.
இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..
விஜயகாந்துக்கு புரட்சிக் கலைஞர் பட்டம் கொடுத்ததும் கலைப்புலி தணுதான். அவரின் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் கூலிக்காரன். இந்த படம் உருவாகி கொண்டிருந்தபோது மணலியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தாணு, விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தார் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது விஜயகாந்துக்கு என்ன பட்டம் வைக்கலாம் என பேச்சு எழுந்தது. புரட்சி நடிகர், நடிகர் திலகம் இருக்காங்க. நான் கலைஞரின் தாசன். எனவே, புரட்சி கலைஞர் என இருக்கட்டும் என தாணு சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆரிடமிருந்து புரட்சி-ஐ எடுத்து அதில் கலைஞரை சொருகிவிட்டார் தாணு. இப்படித்தன் விஜயகாந்த புரட்சிக் கலைஞராக மாறினார். கூலிக்காரன் படத்தில்தான் விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டத்தோடு டைட்டில் கார்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல இரண்டு இல்ல.. விஜயகாந்த் டபுள் ஆக்ஷன் வேடம் போட்ட படங்கள் இத்தனையா?