Connect with us
vijayakanth

Cinema News

அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..

Vijayakanth: கடந்த சில நாட்களாகவே ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரம் விஜயகாந்தின் மரணம்தான். சினிமாவிலும், அரசியலிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்த அவரின் மறைவு பலரையும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்புள்ள, பழகிய பலரும் ஊடகங்களில் அவரை பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு கடந்த 30 வருடங்களாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் விஜயகாந்துடனான பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். விஜயகாந்துக்கு அவருக்கு பிடித்த மாதிரி ஒரு கார் டிரைவர் தேவைப்பட்டார். நான் மதுரையை சேர்ந்தவன்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருந்ததா?!. மனுஷன் பச்ச புள்ளையா இருந்திருக்காரே…

இப்ராஹிம் ராவுத்தர்தான் என்னை விஜயகாந்திடம் அறிமுகம் செய்து வைத்து ‘இவன் நம்ம பையன். நல்லா வண்டி ஓட்டுவான். வைத்துக்கொள்’ என சொன்னார். அதற்கு விஜயகாந்த் ‘என் டேஸ்டுக்கு இவன் வண்டி ஓட்டுவானா?’ எனக்கேட்டார். உன் டேஸ்ட்டு எனக்கு தெரியாதாடா.. சரியாக இருப்பான்’ என அவர் சொல்ல விஜயகாந்திடம் வேலைக்கு சேர்ந்தேன்.

1989ம் வருடம் மீனாட்சி திருவிளையாடல் என்கிற படத்தில் அவர் அப்போது நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்புக்கு என்னை போக சொன்னார். காரை வேகமாக ஓட்டு என்றார். நான் டிரைவர் மட்டுமல்ல. மெக்கானிக்கும் கூட. எனவே, காரை வேகமாக ஓட்டி அவரை கொண்டு சேர்த்தேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது.

இதையும் படிங்க: நான் அவர் கூட இருந்திருந்தா கேப்டனை எப்படி பார்த்திருப்பீங்க தெரியுமா? மன்சூர் அலிகான் சொன்னத கேளுங்க

உடனே ராவுத்தரை தொலைப்பேசியில் அழைத்து ‘சூப்பர் பையன்டா.. இவன நான் வச்சிக்குறேன்’ என்றார். அதன்பின் 30 வருடமாக அவருக்கு நான்தான் கார் டிரைவர். என்னை ஒருநாள் கூட டிரைவர் போல அவர் நடத்தியது இல்லை. வெளியே தங்கினால் அவருடன் பெட்டிலேயே என்னை படுக்க சொல்வார். அது வேண்டும். இது வேண்டும் என ஒருபோதும் அவரிடம் நான் எதுவும் கேட்டதில்லை. எனக்கு என்ன வேண்டும் என அவரே பார்த்து பார்த்து செய்வார்.

venkatesh

சென்னையிலிருந்து கோயம்பத்தூர் வரை அவரும், அண்ணன் ராதாவியும் காரில் ரேஸ் ஓட்டுவார்கள். என்னை பின்னால் உட்கார வைத்துவிட்டு அண்ணன் விஜயகாந்த் வேகமாக காரை ஓட்டுவார். அதை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கும். ‘பயப்படாதே.. காருக்கு எதும் ஆனாலும் நமக்கு ஒன்றும் ஆகாது’ என சொல்வர்.

அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. ஆனால், எல்லோரும் நினைப்பது போல அதற்கு அவர் அடிமையெல்லாம் இல்லை. அவரை போல சண்டைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர் கிடையாது. உடலை வறுத்தி சண்டை காட்சிகளில் நடிப்பார். தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து அவரின் காலை தூக்கி நெற்றியில் படும்படி வைக்க சொல்வார். அப்படி பயிற்சி எடுத்தால்தான் சண்டை காட்சிகளில் அவரால் அப்படி நடிக்க முடிந்தது. அவர் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் சொந்த அண்ணனை இழந்துவிட்ட சோகத்தில் இருக்கிறேன்’ என டிரைவர் வெங்கடேசன் கூறினார்.

இதையும் படிங்க: வடிவேலு கண்ணாடி போட்ட குபீர் காரணம்!.. வசமாக விஜயகாந்திடம் சிக்கிய சூப்பர் சம்பவம்!

google news
Continue Reading

More in Cinema News

To Top