Vijayakanth: விஜயகாந்த் சினிமா உலகினருக்கு செய்தது ஏராளம். பல புதிய இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மேலே தூக்கிவிட்டவர். புலன் விசாரணை படத்தில் சரத்குமாருக்கு வில்லன் வேடம் கொடுத்து தூக்கிவிட்டார். அதே, சரத்குமாரை தனது சொந்த தயாரிப்பில் தாய்மொழி என்கிற படத்தில் ஹீரோவாக்கினார். அதேபோல்தான் மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் அறிமுகம் செய்து வைத்து தூக்கிவிட்டார்.

திரைப்படக்கல்லூரியை சேர்ந்த 47 பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். விஜயின் படங்கள் ஓடாத போது அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். அதேபோல், சிவக்குமாரிடம் கொண்ட நட்புக்காக சூர்யாவை தனது பெரிய அண்ணன் படத்தில் நடிக்க வைத்தார். இப்படி அவர் வளர்த்துவிட்டவர்கள் ஏராளம். அதேபோல், நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டு அதன் கடனை அடைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!
ஆனால், சினிமா உலகுக்கு இவ்வளவு செய்த விஜயகாந்துக்கு சினிமா உலகம் எதையும் செய்தது இல்லை. அதை அவர் எதிர்பார்த்ததும் இல்லை. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட சொற்பமான நடிகர்களே வந்தனர். பெரிய நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதியை தவிர யாரும் வரவில்லை. இது விவாதப்பொருளாக மாறியது. ஏனெனில், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் புதுவருட கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றிருந்தனர். எனவே, ரசிகர்கள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர்.
புதுவருட கொண்டாட்டம் முடிந்த நிலையில் ஒவ்வொருவராக விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலில் கார்த்தி வந்தார். அதன்பின் சூர்யா வந்தார். சுர்யாவோ குலுங்கி குலுங்கி அழுதார். இதையடுத்து புளூசட்ட மாறன் இதை செமையாக நக்கலடித்து வருகிறார்.
சென்னையில் உள்ள மருந்து கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பர்பாமன்ஸ் என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். மேலும், பாண்டிச்சேரியில் இருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும், ஜாலியாக புதுவருடத்தை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு இப்போது வந்து வருத்தப்படுவது போல நடிகர்கள் நடிக்கிறார்கள்’ என்பது போல மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்.
