Cinema News
கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…
Kalaignar 100: தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக சினிமாவில் தனது கேரியரை துவங்கியவர்தான் விஷால். அதன்பின் எப்படியோ நடிக்கும் ஆசை வந்துவிட்ட செல்லமே என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். திமிரு திரைப்படம் இவருக்கு நல்ல ஓப்பனிங்கை பெற்று கொடுத்தது. விஜய் நடிக்க வேண்டிய அந்த கதையில் விஷால் நன்றாகவே நடித்திருந்தார்.
அதேபோல், லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சண்டக்கோழி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்து விஷாலை ஒரு ஆக்ஷன் நடிகராக முன் நிறுத்தியது. அதன்பின் இப்போது வரை பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். ஆனால், சோகம் என்னவெனில் விஷால் நடித்து வெளியான சில படங்கள் மட்டுமே வசூலை பெற்றது. மற்றதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க: பர்ஃபாமன்ஸ்லாம் பண்ண முடியாது!. கலைஞர் 100வது விழாவுக்கு எஸ்கேப் ஆகும் நடிகர்கள்…
பல வருடங்களுக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. அதே உற்சாகத்தோடு இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேநேரம், நடிகர் சங்க செயலாளராக இருந்தும் பல விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
சமீபத்தில் நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மரணமடைந்தார். ஆனால், அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட விஷால் வரவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அவர் அழுதுகொண்டே ஒரு வீடியோவை போட்டு இரங்கல் தெரிவித்தார். ஒருபக்கம், ஒரு பெண்ணுடன் அவர் ஜாலியாக ஊரை சுற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையும் படிங்க: பாகுபலி ரேஞ்சில் பார்த்திபன் இயக்க விஜயகாந்த் நடிக்க இருந்த பிரம்மாண்டமான படம்… அப்புறம் என்ன ஆச்சு?
ஒருபக்கம், தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கும் அவர் வராமாட்டார் என தெரிகிறது. ஏனெனில், வருகிற ஜனவரி 6ம் தேதி அந்நிகழ்ச்சி நடக்கும் நிலையில் 8ம் தேதிதான் விஷால் சென்னை வருவதாக சொல்லப்படுகிறது. அவர் நினைத்தால் 2 நாட்களுக்கு முன்பே வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.
ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. அதற்கு காரணமாக சொல்லப்படுவது உதயநிதி ஸ்டாலின். அதாவது, பல வருடங்களாகவே உதயநிதியுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில்தான் விஷால் இருந்தார். ஆனால், சமீபகாலமாக அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு என சொல்லப்படுகிறது. அதனால்தான் கலைஞர் நூற்றாண்டு விழாவை விஷால் தவிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…