பிரேமலதாதான் பொண்ணு!. ஜோசியத்தை வச்சி கேப்டனை நம்ப வச்ச குடும்பத்தினர்…

Published on: January 6, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து படிப்படியாக முன்னேறியவர் விஜயகாந்த். விஜயகாந்தை தமிழ் சினிமா உலகம் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி மேலே வந்தார். நல்ல நடிகராக இருக்க வேண்டும் என்பதை விடவும் நல்ல மனிதர் என பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் எண்ணமாக இருந்தது.

ஈவு இரக்கமுள்ள, மனிதாபிமானம் உள்ள மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதராக இருந்ததால்தான் விஜயகாந்தை எல்லோருக்கும் பிடித்துப்போனது. எல்லோருக்கும் உதவி, தன்னை நம்பி வரும் எல்லோரும் உணவளித்து ஒரு வாழும் மனித தெய்வமாகவே விஜயகாந்த் பலருக்கும் இருந்தார்..

இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

விஜயகாந்தின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை அவர் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன் அவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருந்த இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தின் குடும்பத்தினரும் அதற்கு சம்மதிக்கவில்லை.

சினிமா துறையில் இல்லாத ஒருவரையே விஜயகாந்த் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். பல இடங்களிலும் பெண் தேடினர். விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையிலேயே அவருக்கு பெண் கிடைக்கவில்லை. அதன்பின்வேலூர் குடியாத்தத்தில் கிடைத்த பெண்தான் பிரேமலதா.

ஆனால், விஜயகாந்தோ தடுமாற்றத்திலேயே இருந்துள்ளார். விஜயகாந்துக்கு ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டாம். எனவே, பிரேமலதாவின் ஜோதிடத்தை ஜோதிடரிம் கொடுத்து ‘இந்த பெண்ணை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என விஜயகாந்திடம் சொல்லுங்கள்’ என அவரின் குடும்பத்தினர் சொன்னார்களாம்.

அவரும் அப்படியே சொல்ல பெண் பார்க்க போனார் விஜயகாந்த். அவருக்கும் பிரேமலதாவை பிடித்துப்போக உடனே சம்மதம் சொல்லிவிட்டார். இப்படித்தான் விஜயகாந்தின் வாழ்வில் பிரேமலதா வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.