Cinema News
சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..
Kalaignar 100: சினிமா என்பதே ஒரு கூட்டு முயற்சிதான். இவரால்தான் இவர் வந்தார் என்பது எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவர் மூலம் வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்துக்கொள்ள திறமை வேண்டும். ஒரு நடிகன் உருவாதற்கு அவரை நம்பும் ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் வேண்டும்.
அப்படி வெற்றி கிடைத்தாலும் அந்த ஹீரோ அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு திறமை மிகவும் அவசியம். பூவே உனக்காக படத்தில் அப்படித்தான் விஜயை நம்பினார் விக்ரமன். அதன்பின் தனது திறமையால் தன்னை வளர்த்துக்கொண்டதால்தான் இப்போது இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க: அடடா! இப்படி ஓபனா கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்? பிரதீப் கேள்வியால் திணறிய பூர்ணிமா!..
ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்து நீங்கள்தானே என ஒருமுறை பாலச்சந்தரிடம் கேட்டபோது ‘அப்படி சொல்ல முடியாது. நான் இல்லையென்றாலும் வேறு ஒருவர் படம் மூலம் ரஜினி கண்டிப்பாக சினிமாவில் நடிக்க வந்திருப்பார்’ என சொன்னார். எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. அதேபோல், சிவாஜி அறிமுகமான முதல் படமான பராசக்தி படத்திற்கும் வசனம் அவர்தான்.
கலைஞர் ஒரு வசனகார்த்தாவாக மக்களிடம் ரீச் ஆனது அந்த படத்தில்தான். சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி ஆகியோர் ஒன்றாக பணிபுரிந்திருந்தாலும் நிஜ வாழ்வில் அரசியல் கொள்கைகளால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டனர். ஒருமுறை ஒரு அரசியல் மேடையில் பேசிய கருணாநிதி ‘நான் எழுதிய வசனங்களால்தான் சிவாஜி என்கிற ஒரு நடிகர் உருவானார்’ என பேசினார்.
இதையும் படிங்க: மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..
அதற்கு பதிலடி கொடுத்த சிவாஜி கணேசன் ‘நான் பேசி நடித்ததால்தான் உங்கள் வசனம் மக்களிடம் புகழ் பெற்றது’ என சொல்லியிருந்தார். இதெல்லாம் தெரியாத நடிகர் ரஜினி சமீபத்தில் திரையுலகால் நடத்தப்பட்ட கலைஞர் 100 விழாவில் பேசியதுதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விழாவில் பேசிய ரஜினி ‘எம்.ஜி.ஆர், சிவாஜியை உருவாக்கியவர் கருணாநிதிதான்’ என பேசியிருந்தார். இதற்குக் சிவாஜி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கலைஞருக்கு சிவாஜி பதிலடி கொடுத்த அந்த பத்திரிக்கை செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து அவர்கள் ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தி படத்துல ஏன் நடிக்கிறீங்க!.. வந்து விழந்த கேள்வி.. பத்திரிகையாளரிடம் எகிறிய விஜய் சேதுபதி!