விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது!.. அவருக்கு இது மட்டும் தான் தெரியும்… பிரபல இயக்குனர் விளாசல்…

Published on: January 9, 2024
---Advertisement---

Vikram: தமிழ் சினிமாவில் பல வருடம் உழைத்து சீயான் என்ற அடைமொழியை பெற்று தனக்கென ஒரு இடத்தினை உருவாக்கி வைத்து இருப்பவர் விக்ரம். ஆனால் அவருக்கு நடிப்பே தெரியாது. அவரை வச்சிட்டு நான் பட்டப்பாடு இருக்கே என இயக்குனர் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல வருடமாக வாய்ப்புக்காக போராடியவர் தான் விக்ரம். அவருக்கு சேது படம் மிகப்பெரிய அங்கீகாரத்தினை கொடுத்தது. தொடர்ந்து காசி படமும் ஹிட் கொடுத்தது. அதையடுத்து அவரும் முன்னணி நடிகராக அடையாளம் பெற்றார். பிதாமகனில் விக்ரம் நடிப்பை பார்த்து சிலர்க்காதவர்களே இல்லை.

இதையும் படிங்க: பாலிவுட்டால் கதிகலங்கிய கோலிவுட் நடிகர்கள்! லெஃப்ட் ஹேண்டில் கையாண்ட மக்கள் செல்வன்

ஐ படத்துக்காக அவர் கொடுத்த உடல் உழைப்பு, ராவணன் படத்தில் அவர் காட்டிய மிரட்டல் எல்லாமே ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது. ஆனால் விக்ரமின் கமர்ஷியல் படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. விரைவில் அவரின் தங்கலான் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் ராஜகுமாரன் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என அதிர்ச்சியான பதிலை கொடுத்து இருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து, விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தினை இயக்கினேன். அந்த படம் தான் அவரை தமிழ் ரசிகர்களின் இல்லம் வரை சேர்த்தது. ஆனால் அந்த படத்தினையே பிடிக்கவில்லை எனக் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…

அதிகபட்சமாக கமல் இல்ல ரஜினி மாதிரி மிமிக்ரி நடிப்பை தான் செய்வார். இல்லையென்றால் மீசையை எடுத்து கையை உடைத்து கொண்டு, காலை மாற்றிக்கொண்டு, ஒன்னரை கண்ணை பார்ப்பது போல நடந்து இருப்பார். அவர் நல்ல நடிகன் எல்லாம் இல்லை எனவும் குறிப்பிட்டு இருப்பது தமிழ் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.