Cinema History
பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… அந்தப் பாடல் தான் காரணம்.!
முதன்முதலாக இயக்குனர் சிகரம் பாலசந்தர் கவியரசர் கண்ணதாசனுடன் கைகோர்த்த படம் இது. படத்தின் பெயர் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கிய படம். இது அவருக்கு 4வது படம். முதல் படம் நீர்க்குமிழி. இது 1965ல் வெளியானது.
பாமாவிஜயம் படத்தைப் பொறுத்தவரை வரவுக்கு மீறி செலவு செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது தான் கதை. படத்தில் முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், சௌகார் ஜானகி, காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
படத்தை முதலில் 13 ஆயிரம் அடி வரை எடுத்து விட்டார் பாலசந்தர். ஆனாலும் அவருக்கு அதிருப்தி. நினைத்த மாதிரி வரவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது. படத்தில் முக்கியமாக கேரக்டரில் பாலையா நடித்துள்ளார்.
தனது உதவியாளர்களை அழைத்து இதுபற்றி பேசினார். அப்போது பாலையா வரவுக்கு மீறி செலவு செய்யும் பெண்ணுக்கு அதை உணர்த்துவது போன்று ஒரு பாடலைப் போட்டால் நன்றாக இருக்கும் என்றனர். அதற்கு கண்ணதாசன் தான் பொருத்தமானவர் என்றும் ஆலோசனை கூறினர். உடனே பாலசந்தர் கண்ணதாசனை சந்தித்தார். அவருக்கு படத்தின் முழு கதையையும் சொன்னார். அது மட்டுமல்லாமல் எடுத்தவரை அத்தனை படத்தையும் போட்டுக் காட்டினார்.
கதையை தெரிந்து கொண்ட கண்ணதாசன், வருமானத்திற்கு அதிகமாக செலவு பண்றாங்க. வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா, கடைசியில் துண்டனா என்ற டயலாக்கை சொல்கிறார். இதைக் கேட்ட பாலசந்தர் தனது படத்தை ரெண்டே வரிகளில் கவிஞர் சொல்லிவிட்டாரே என ஆச்சரியப்பட்டார். இதையே பாடலாக்கிக் கொடுத்து விடுங்க. அது போதும் என்கிறார்.
இதையும் படிங்க… ஆசையாய் கமலை இயக்க போன ஹெச்.வினோத்!… இதெல்லாம் கதையா? கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
இன்னும் நான் பாடல் எழுதவே இல்லை. இது கதை போகிற போக்கில் நான் சொன்னது என்றார். இதுதான் படத்திற்குப் பொருத்தம். அப்படியே இருக்கட்டும். முழுப்பாடலைக் கொடுங்க என்று பாலசந்தர் கேட்டாராம். அடுத்து முழுப்பாடலையும் கண்ணதாசன் எழுதிக் கொடுத்துள்ளார். இதைப் படித்துப் பார்த்த பாலசந்தர் கண்களில் கண்ணீர் வந்ததாம். அந்த அளவு அவருக்கு அதுவும் முதல் சந்திப்பிலேயே பெரிய டச்சைக் கொடுத்துள்ளார் கவியரசர் கண்ணதாசன்.