மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு? ஒருவாரம் ஐசியூ சிகிச்சை!.. என்ன நடந்தது?

Published on: January 11, 2024
---Advertisement---

Mahalakshmi: நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தரின் சமீபத்திய வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அவருக்கு என்ன ஆச்சு? தற்போது எப்படி இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பல படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். ஆனால் அவருக்கு நிறைய புகழை தேடித்தந்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். நிகழ்ச்சிக்குள்ளையே போகாமல் வெளியில் இருந்து ரிவியூ சொல்லியே பலரிடம் தனக்கான இடத்தினை பிடித்து கொண்டார். அதை விட அவரின் கல்யாணத்தில் தான் அதிக புகழ் கிடைத்தது.

இதையும் படிங்க: கூல் சுரேஷ், கேப்டன் மில்லர் கசமுசா!.. அந்த ஐஸ்வர்யாவா ஜாக்கெட் இல்லாம போஸ் கொடுத்துருக்காரு!

90ஸ்களின் கனவு தொகுப்பாளினியாக இருந்தவர் மகாலட்சுமி. அவருக்கு இரண்டாவது கணவர் தான் ரவீந்தர். இவர்களின் திருமண புகைப்படம் வெளிவந்த போது என்னங்கடா இது என்ற ரீதியிலும், அச்சோ போச்சா என்ற புகைச்சலிலும் பலரும் கமெண்ட் செய்ததை பார்க்க முடிந்தது. அந்த வயித்தெரிச்சலை கிளப்பவே இருவரும் அடிக்கடி போஸ்ட் போட்டு வெறுப்பேற்றி வந்தனர்.

ஆனால் திடீரென ஒரு மோசடி வழக்கில் ரவீந்தர் ஒரு மாதம் சிறை செல்ல வேண்டிய நிலை உருவானது. சென்று வந்தவர் கொடுத்த பேட்டியை பார்க்கும் போது அவரின் கஷ்டத்தை பார்த்து கவலைப்படாதவர்களே இல்லை. சரி ஃபீலிங் போதும் என்று நினைத்தவர் தன்னுடைய வழக்கமான வேலைகளில் இறங்கிவிட்டார்.

இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!

பிக்பாஸ் தமிழ் 7வது சீசனை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று ரீவியூவில் அவர் வந்ததை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். காரணம் முகத்தில் ஆக்‌ஷிஜன் மாஸ்க்குடன் உட்கார்ந்து இருந்தார். அதுகுறித்து அவர் சொல்லும்போது,

நுரையீல் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கேன். நெஞ்சு வலியும் இருந்ததால் ஐசியூவில் ஒரு வாரமாக அட்மிட் செய்து இருந்தனர். தற்போது வீட்டுக்கு வந்துவிட்டேன். என் முகத்தில் இருப்பது என்னுடைய ஆக்‌ஷிஜனை சமநிலையில் வைத்து கொள்ளும். என்னால் பேசவும் முடியும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவாக அவரை கலாய்க்கும் ரசிகர்கள் இதை பார்த்து கவலைப்பட்டனர். ரவீந்தரிடம் ரெஸ்ட் எடுங்க. இப்படி வரணும்னு அவசியம் இல்ல. டயர்ட்டில் இருங்க என வரிசையாக ஆறுதல் சொல்லி வருவதையே நிறைய கமெண்ட் பகுதியில் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.