விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

Published on: January 11, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் இறப்பு செய்தி வதந்தியாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஏனெனில், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதே அவர் இறந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை பரப்பினார்கள். இது விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

இதில், கோபமடைந்த பிரேமலதா இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் என கண்ணீர் மல்க கோரிக்கையும் வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த் 2 நாட்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: இந்த கணக்கு குறைஞ்சிடும்!… அதனால் தான் விஜயுடன் நடிக்கவில்லை!… அஜித்தே சொன்ன உண்மை!..

இந்த செய்தி வெளியாகி சில மணி நேரங்களில் அவரின் மரண செய்தி வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதன்பின்னர் அவரின் உடல் அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு சிலர் அஞ்சலி செலுத்திய பின் அவரின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடம் கொண்டு செல்லப்பட்ட, பின்னர் அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை முதலில் திரையுலகில் பலரும் நம்பவில்லை. அதில் ரஜினியும் ஒருவர். அப்போது அவர் கன்னியாகுமாரியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரனிடம் பேசிய பின்னர்தான் அவருக்கு அது உண்மை என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நெருங்கும் பிக்பாஸ் பைனல்ஸ்!.. வின்னர் தேர்வில் நடக்கப்போகும் சூழ்ச்சி!… எல்லாம் போச்சா!

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ராஜேந்திரன் ‘கேப்டன் இறந்த செய்தி வெளியாகி 5 நிமிங்களில் ரஜினி சாரின் பி.ஏ. என்னை தொடர்பு கொண்டு அந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டார். சிறிது நேரத்தில் ரஜினியே என்னிடம் பேசினார். அவர் குரல் கேட்டவுடனேயே நான் அழுதுவிட்டேன்’.

எனக்கு ஆறுதல் சொன்ன ரஜினி சார் ‘வருத்தப்படாதீர்கள்.. எப்போது அடக்கம் செய்கிறார்கள்?’ என கேட்டார். நான் ‘நாளை’ என சொன்னதும் ‘இப்போது நான் கன்னியாகுமரியில் இருக்கிறேன். நாளை வருகிறேன்’ என சொன்னார். சொன்னபடியே நேரில் வந்து அவர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார்’ என மீசை ராஜேந்திரன் கூறியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.